Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உள்ளாட்சி தின விழா மாணவர்களுக்கு பேச்சு போட்டி வென்றோருக்கு பரிசு

Print PDF

தினகரன்                                02.11.2010

உள்ளாட்சி தின விழா மாணவர்களுக்கு பேச்சு போட்டி வென்றோருக்கு பரிசு

கரூர், நவ. 2: கரூர் மாவட்டத்தில் உள்ள ஊரக நகர் ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நேற்று உள்ளாட்சிகள் தின விழா நடைபெற்றதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை போட்டி கள் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், மக்களுக்கும் இடையே நல்லுறவினை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1ம்தேதி உள்ளாட்சிகள் தின விழா கொண்டாடப்படுகிறது. இதையடுத்து நேற்று உள்ளாட்சி தினவிழா அனைத்து உள்ளாட்சி மன்றங்களிலும் கொண்டாடப்பட்டது. கரூர் மாவட்ட ஊராட்சி அலுவலக கட் டட கூட்ட அரங்கில் நடை பெற்ற உள்ளாட்சிகள் தின விழாவுக்கு மாவட்ட ஊரா ட்சி தலைவர் ரமேஷ்பாபு தலைமை வகித்தார். துணைத்தலைவர் செல்லமுத்து, மாவட்ட ஊராட்சி செயலாளர் கனகம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் நாகரத்தினம், கந்தசாமி, கஸ்தூரிதங்கராஜ், கோபால் ஆகியோர் கலந்துகொண்டனர். உள்ளாட்சிகள் தினவிழாவையொட்டி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இனாம் கரூர் நகராட்சியில் உள்ளாட்சிகள் தின விழா நகராட்சி மன்ற அலுவலகம் முன் நடைபெற்றது. நகராட்சி தலைவி கவிதா கணேசன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசளிக்கப்பட்டது. இசைநாற்காலி போட்டியில் நகர்மன்ற தலைவி கவிதா கலந்துகொண்டார்.

இதேபோன்று மாவட் டம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி மன்றங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவைகளின் செயல்பாடுகள் குறித்த சுவரொட்டிகள், விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. மாணவ மாணவிகளுக்கு உள்ளாட்சி நிர்வாகம் குறித்த பேச்சுப்போட்டி, பொது அறிவு போட்டிகள் ஆகியவற்றை நடத்தி அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் விழா நடைபெற்றது.