Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மழை நீர் வடிகால், சாலைகளை பராமரிக்காத மாநகராட்சி பொறியாளர்கள் 3 பேர் சஸ்பெண்ட்

Print PDF

தினகரன்                    04.11.2010

மழை நீர் வடிகால், சாலைகளை பராமரிக்காத மாநகராட்சி பொறியாளர்கள் 3 பேர் சஸ்பெண்ட்

மதுரை, நவ. 4: மழை நீர் வடிகால் மற்றும் சாலைகளை சரியாக பராமரிக்காத மாநகராட்சி பொறியாளர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மதுரையில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடியாமல் தேங்குகிறது. மழை நீர் தேங்காமல் வடிகால்களை தூர்வாரி சுத் தம் செய்யும்படி அனைத்து வார்டு பொறியாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டது. இதன்படி சுத் தம் செய்யப்பட்டுள்ளதா? என நேற்று ஆணையா ளர் செபாஸ்டின், தலைமை பொறியாளர் சக்தி வேல் ஆய்வு நடத்தி னர்.

இதில் தமிழ் சங்கம் சாலை மற்றும் மதுரா கோட்ஸ் மேம்பாலத் தின் கீழ் பகுதி ஆகிய இடங்களில் வடிகால் கள் தூர் வாரி சுத் தம் செய்யப்படாமல் மழை நீர் தேங்கி நின்றது. எனவே அந்த வார்டு உதவி பொறியாளர்கள் பெரியசாமி, திருஞானசம்பந்தம் ஆகியோர் சஸ் பெண்ட் செய்யப்பட்டனர்.

இதே போல் மழையால் சாலைகள் சேதமடைந்து குழிகள் விழுந்துள்ளன. இந்த குழிகளை மூடி மராமத்து பணி மேற்கொள்ளும்படி உத்தரவிடப்பட்டு இருந்தது. இதனை ஆய்வு செய்ததில் தவிட்டு சந்தை, காமராஜர் சாலை ஆகிய பகுதி சாலைகளில் குழி மூடப்படாமல் அலங்கோலமாக கிடந்தது. எனவே சாலை மராமத்து பணியை சரியாக மேற்கொள்ளாத இளநிலை பொறியாளர் விஜயகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவுகளை ஆணையாளர் செபாஸ்டின் பிறப்பித் தார்.

வடிகால்களில் மழைநீர் வடியாமல் தேங்குவது குறித்தும், மழையால் சாலைகள் பழுதடைந்து குழிகளாகி இருப்பது குறித்தும் கடந்த வாரம் தினகரன் பத்திரிகையில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து மாநகராட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.