Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி, பேரூராட்சிகளில் அரசின் சாதனைகளை விளக்கும் சிறப்பு படக்காட்சி காட்ட ஏற்பாடு

Print PDF

தினகரன்                10.09.2010

நகராட்சி, பேரூராட்சிகளில் அரசின் சாதனைகளை விளக்கும் சிறப்பு படக்காட்சி காட்ட ஏற்பாடு

திண்டுக்கல், நவ. 10: அரசின் சாதனைகளை விளக்கும் சிறப்பு படக்காட்சி நகராட்சி, பேரூராட்சிகளில் காட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் அரசின் சாதனைகளை விளக்க செய்தி மக்கள் தொடர்பு அலுவலக வாகனம் மூலம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமப்பகுதிகளில் குறும்படங்கள் காட்டப்படுகின்றன. இதன் தொடர் நடவடிக்கையாக நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இவற்றை ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல்வர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியின் சாதனைகள், தஞ்சை பெரியகோயில் ஆயிரமாவது ஆண்டு விழா, தாயுமானவர்(திரைப்பட நலவாரியம்) போன்ற குறும்படங்கள் காட்டப்பட உள்ளன.

நவ.10ம் தேதி காளனம்பட்டி, புதூர், 11ம் தேதி சத்திரப்பட்டி, கருங்கல்பட்டி, 12ம் தேதி மேல்கரைபுதூர், ஆவாரம்பட்டி, 15ம் தேதி சுக்காம்பட்டி, கொண்டசமுத்திரப்பட்டி, 16ம் தேதி ரெட்டியபட்டி, சேடபட்டி ஆகிய இடங்களிலும், 18ம் தேதி முதல் தாடிக்கொம்பு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான அய்யம்பாளையம், தாயார்புரம், 19ம் தேதி பூசாரிகவுண்டனூர், சித்தையகவுண்டனூர், 20ம் தேதி உண்டார்பட்டி, பள்ளப்பட்டி, 21ம் தேதி பெரியமல்லனம்பட்டி, சின்னமல்லனம்பட்டி, 22ம் தேதி காமாட்சிபுரம், தாடிக்கொம்பு, 23ல் பிறகரை, இன்னாசிபுரம், 24ம் தேதி மைக்கேல்பாளையம், மூக்கையகவுண்டனூர் ஆகிய இடங்களிலும் காட்டப்பட உள்ளன.

இதே போல் நவ.25ம் தேதி வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளலான நாகம்பட்டி, பெருமாள்கவுண்டன்பட்டி, 26ல் மாரம்பாடி, சின்னமுத்தனம்பட்டி, 29ம் தேதி மல்வார்பட்டி, சவேரியார்பட்டி, 30ம் தேதி ஸ்ரீராமபுரம், மண்டபம்புதூர் ஆகிய இடங்களிலும் சிறப்புப் படக்காட்சிகள் காட்டப்படுகின்றன.

இதன்மூலம் அரசின் நலத்திட்ட உதவிகள், சாதனைகள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம் என்று கலெக்டர் வள்ளலார் தெரிவித்துள்ளார்.