Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

15 வேலம்பாளையம் நகராட்சி புதிய அலுவலகத்தில் செயல்பட துவங்கியது

Print PDF

தினகரன்           11.11.2010

15 வேலம்பாளையம் நகராட்சி புதிய அலுவலகத்தில் செயல்பட துவங்கியது

திருப்பூர், நவ. 11: 15 வேலம்பாளையம் நகராட்சி அலுவலகம் நேற்று முதல் காந்தி ரோட்டில் உள்ள புதிய அலுவலகத்தில் செயல்பட துவங்கியது.

திருப்பூர் அடுத்துள்ள 15 வேலம்பாளையம் மூன்றாம் நிலை நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீட்டு வரி செலுத்தி வருகின்றனர். 11 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளது. 15 வேலம்பாளையம் நகராட்சியா னது, ஊராட்சியாக இருந்து பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மூன் றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் பேரூராட்சியாக இருந்தபோது அலுவலகத்தில் எத்தனை ஊழியர்கள் இருந்தார்களோ? அதே அளவுக்கு தான் தற் போதும் உள்ளனர். அதே போல் நகராட்சி அலுவலகமும் எந்த வித வசதியும் இன்றி இருந்து வந்தது. இதனால் வரி கட்ட வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மேலும் நகர் மன்ற கூட்ட அரங்கமும் வசதி இல்லாமல் இருந்து வந்தது. இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பர்பாளையம் காந்தி ரோட்டில் சகல வசதிகளுடன் கூடிய புதிய அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டு, அலுவலக கட்ட டம் கட்டி முடிக்கப்பட்டது. புதிய அலுவலகத்தை கடந்த மாதம் 17ம் தேதி திருப்பூருக்கு வந்த துணை முதல்வர் மு..ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் நேற்று பழைய அலுவலகத்திலிருந்து அனைத்து பொருட்களும் புதிய அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டு செயல்பட துவங்கியது.