Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகரின் மிக உயரமான கட்டிடம் மாநகராட்சி அலுவலகம் இன்று புது கட்டிடத்துக்கு மாறுகிறது

Print PDF

தினகரன்               11.11.2010

நகரின் மிக உயரமான கட்டிடம் மாநகராட்சி அலுவலகம் இன்று புது கட்டிடத்துக்கு மாறுகிறது

புதுடெல்லி, நவ. 11: மாநகராட்சி அலுவலகம் தன்னுடைய புது கட்டிடத்துக்கு இன்று மாறுகிறது. மாநகராட்சி அலுவலகம், சாந்தினி சவுக்கில் உள்ள டவுன் ஹால் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் மிகவும் பழமையாகிவிட்டதால், மாநகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக சாந்தினி சவுக்கில் ரூ.650 கோடி செலவில் 28 மாடி கொண்ட மிகப்பெரிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்துக்கு யார் பெயரை வைப்பது என்பதில் பா.. காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர், பா..வின் தொடக்கக்கால அமைப்பான ஜனசங்கத்தின் நிறுவனர் ஷியாம் பிரசாத் முகர்ஜியின் பெயர் வைக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி நடந்தது. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கட்டிடத்தை திறந்து வைத்தார். இக்கட்டிடத்தில் 28வது மாடியில் இருந்து பார்த்தால் நகரின் பெரும்பாலான பகுதியை காண முடியும். மேலும், நகரிலேயே மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.

மாநகராட்சியின் நிதி ஆதாரத்தை அதிகரிக்கும் வகையில், கட்டிடத்தின் சில பகுதிகள் அரசு நிறுவனங்களுக்கு நீண்டகால அடிப்படையில் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.

இந்நிலையில், டவுன் ஹாலில் இயங்கி வந்த மாநகராட்சி அலுவலகம் இன்று முதல் புது கட்டிடத்துக்கு மாறுகிறது. டிசம்பர் 8ம் தேதி வரையில் நான்கு கட்டங்களாக மாநகராட்சி அலுவலகங்கள் இடம் மாற உள்ளன. மாநகராட்சியின் சுகாதாரம், கல்வி, பொறியியல், வீட்டு வரித்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் அலுவலகங்கள் புதிய கட்டிடத்துக்கு மாறுகின்றன.

எனினும், மேயர், அவை முன்னவர், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகங்கள் பழைய கட்டிடத்திலேயே இப்போதைக்கு இருக்கும். புதிய கட்டிடம் தினமும் 20,000 பேர் வந்து செல்லும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மாநகராட்சி அலுவலகங்கள் அனைத்தும் புதிய கட்டிடத்துக்கு மாறிய பின்னர், பழைய கட்டிடம் பாரம்பரிய ஓட்டலாக அல்லது அருங்காட்சியகமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

பரந்து விரிந்த கட்டிடம் ரூமாநகராட்சியின் புதிய கட்டிடம் 1.16 லட்சம் பரப்பளவில் மிக பரந்து விரிந்துள்ளது. இயற்கையில் கிடைக்கும் மழைநீர், காற்று, சூரிய ஒளி ஆகியவற்றை முழுமையாக பயன்படுத்தும் வகையில் இந்த கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. ரூபுதிய கட்ட 1994ம் ஆண்டு வாஜ்பாயால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், 2005ம் ஆண்டில்தான் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. கட்டி முடிப்பதற்கான கால அளவு பல முறை நீட்டிக்கப்பட்டு இறுதியாக ஏப்ரலில்தான் நிறைவடைந்தது. ரூமலேசியாவை சேர்ந்த ஐ.ஜே.எம். கார்ப்பரேஷன் நிறுவனம் இந்த கட்டிடத்தை கட்டியுள்ளது. ரூபுதிய கட்டிடத்திலும் மழைநீர் பெருமளவு தேங்குவதாக புகார் எழுந்துள்ளது. ரூபுதிய கட்டிடத்தில் 6 மாடிகளை கொண்ட நான்கு கட்டிடங்களும், 28 மாடிகளை கொண்ட ஒரு கட்டிடமும் உள்ளது. ரூ1,000 பேர் அமரும் வகையில் அரங்கம், ஓவிய வளாகம், உணவு விடுதி, 33 கே.வி. துணை மின் நிலையம், காத்திருக்கும் பகுதி, அழகிய நீரூற்றுகள், திறந்தவெளி அரங்கம், மாநகராட்சி கூட்டம் மற்றும் நிலைக்குழு உறுப்பினர்கள் கூட்டத்துக்காக 3 பிரமாண்ட ஹால்கள், பத்திரிகையாளர் மையம் என பல வசதிகள் இதில் உள்ளன.

Last Updated on Thursday, 11 November 2010 06:01