Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும்

Print PDF

தினகரன்                      15.11.2010

உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும்

புதுச்சேரி, நவ. 15: புதுவை மாநில கூட்டுறவு ஒன்றியத்தின் 57வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் துவக்க விழா கரிக்கலாம்பாக்கத்தில் நேற்று நடந்தது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பாபு வரவேற்றார். ராஜாராமன் எம்.எல்., நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து தலைவர் ராஜவதனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். தலைமை தாங்கி சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு விருது வழங்கி அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:

வார்டு உறுப்பினர்கள் முதல் பிரதமமந்திரி வரை அனைவரும் மக்கள் பிரதிநிதிகள்தான். எனவே மக்களுக்காக உழைக்க வேண்டும். கூட்டுறவு துறை 90 சதவீதம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

10 சதவீதம் மட்டும் தான் நஷ்டம் இல்லாமல் உள்ளது. கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த போதுமான நிதி ஆதாரம் இல்லை. அதற்கான கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் கடுமையாக போராட்டத்தோடு விவசாயம் செய்து வருகிறார்கள், ஆட்கள் பற்றாக்குறை, உரத்தட்டுப்பாடு ஆகியவற்றால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை போக்க கூட்டுறவு துறை மூலம் உரங்கள் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் ரூ. 2.50 காசு உயர்த்தி அறிவித்து இன்றுவரை வழங்கப்படாமல் உள்ளது. இதற்கும் போதுமான நிதி இல்லாததே காரணம்.

பால் உற்பத்தியை பெருக்க சிறப்பு கூறு நிதியிலிருந்து நிதி ஒதுக்கியுள்ளோம். இதன் மூலம் 9 ஆயிரம் மாடுகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்க முடியும். மற்ற சமூகத்தினருக்கு 50 லட்சம் மட்டுமே நிதி உள்ளது. எனவே 400 பேருக்கு மட்டுமே வழங்க முடியும். கூடுதல் நிதி பெற்று சமமாக வழங்கப்படும். உள்ளாட்சி பிரதிநிதிகள் குறைகளை சொல்வதே வேலையாக வைத்துள்ளனர். குறை சொல்வதை விட்டு மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இணைபதிவாளர் வீரமுனிராஜ், மாநில நீராதார கூட்டமைப்பு தலைவர் அங்குதாஸ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் குமரேஸ்வரன், தெற்கு மாவட்ட பொது செயலாளர் மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். துணை பதிவாளர் வைத்திலிங்கம் நன்றி கூறினார்.

அமைச்சர் கந்தசாமி பேச்சு சிறந்த 10 கூட்டுறவு சங்கங்கள்:

காரைக்கால் வரிச்சிக்குடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி

கொரவள்ளி மேடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம்

ஏனாம் கூட்டுறவு பண்டக சாலை

புதுவை தஞ்சாவூர் மகளிர் கலை தொழில் நுட்ப வல்லுநர்கள் கூட்டுறவு சங்கம்

விகாஸ் மகளிர் குடிசை தொழிலியல் கூட்டுறவு சங்கம்

கால்நடைக்கல்லூரி கல்லூரி மாணவர்கள் கூட்டுறவு பண்டகசாலை

புதுவை அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன்சங்கம்

லாஸ்பேட்டை கூட்டுறவு நெசவாளர் கூட்டுறவு சங்கம்

ஸ்ரீ ஜெயமாருதி கூட்டுறவு வீட்டு வசதி சங்கம்

நரம்பை மீனவர் கூட்டுறவு சங்கம்