Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தனியாருடன் இணைந்து நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தினகரன்                           18.11.2010

தனியாருடன் இணைந்து நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு மாநகராட்சி நடவடிக்கை

பெங்களூர், நவ. 18: தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் (என்.ஜி.) உதவியுடன் பெங¢களூரிலுள்ள தெருநாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யும் பணி நடந்துவருகிறது.

பெங்களூர் நகரில் மட்டும் 1 லட்சத்து 83 ஆயிரம் தெருநாய்கள் உள்ளதாக கடந்தாண்டு பிபிஎம்பி நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்தது. நகர மக்களுக்கு பெரும் தொல்லை கொடுத்துவரும் நாய்களின் அட்டகாசத்தை குறைப்பதற்காக அவற்றுக்கு குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை மேற¢கொள்ளப்படுகிறது. நகரிலுள்ள பல தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் பணிச்சுமை அதிகமாக இருப்பதாக கைவிரித்துவிட்டதால் மும்பை மற்றும் ஐதராபாத்திலிருந்து தலா 2 என்.ஜி.ஓக்கள் மற்றும் பெங்களூர் நகரில் 4 என்.ஜி.ஓக்கள் என மொத்தம் 7 நிறுவனங்களிடம் கு.க பணி அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாய்க்கு கு.க செய்வதற்கு ரூ.600 ஊதியமாக அளிக்கப்படுகிறது. 12 பேர் கொண்ட ஒரு குழுவில் 4 டாக்டர்கள் உள்ளனர். இரு பாலின நாய்களுக்குமே கு.க பொருந்துகிறது. ஒரு குழுவிற்கு 10 முதல் 12 வார்டுகள் பிரித்துக்கொடுக்கப்பட்டுள்ளன. அந¢த வார்டுகளில் உள்ள தெருநாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை மேற்கொள்ளும் பணியை இவர்கள் பார்த்துக்கொள்வார்கள். 10 நாட்களுக்கு முன்பு இப்பணி துவங்கியுள்ளது.