Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருக்காட்டுப்பள்ளியில் ரூ5 லட்சத்தில் வளர்ச்சிப்பணி பேரூராட்சி கூட்டத்தில் முடிவு

Print PDF

தினகரன்                 19.11.2010

திருக்காட்டுப்பள்ளியில் ரூ5 லட்சத்தில் வளர்ச்சிப்பணி பேரூராட்சி கூட்டத்தில் முடிவு

திருக்காட்டுப்பள்ளி, நவ. 19: திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் ரூ5 லட்சத்தில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி கூட்டம் தலைவர் கோகிலாசிங்காரவேலு தலைமையில் நேற்று நடந்தது. துணைத்தலைவர் துரைராஜ், செயல் அலுவலர் மனோகர், தலைமை எழுத்தர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் குணசேகரன், வளர்மதி, மங்கையற்கரசி, இளங்கோவன், கண்ணகி, ரகமத்துல்லா, ரதி, மெய்யழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 2010 & 11 ஆண்டு கேளிக்கை வரி மான்ய திட்டத்தில் ரூ5 லட்சத்தில் ஓன்பத்துவேலி மயான மேம்பாடு செய்தல், இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதியில் ரூ15 லட்சத்தில் பாலாஜிநகர், 50ம் நம்பர் சாலையில் வடிகால் அமைத்தல், காவிரி நடுக்கரையில் ரூ2.50 லட்சத்தில் ஆழ்குழாய் கிணறு மற்றும் பம்பு ரூம் அமைத்தல் என ரூ22.5 லட்சத்தில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தவிர ஒன்பத்துவேலி அக்ரஹார தெருவில் தார் சாலை, கிறிஸ்துவ தெருவில் சிமென்ட் சாலை அமைத்தல், மார்க்கெட்டில் உள்ள ஆடு வதை கூடத்தில் காலை 6 முதல் 8மணிவரை மட்டுமே ஆடுவதை செய்ய அனுமதிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. செயல் அலுவலர் மனோகர் பேசுகையில் சுவர்ண ஜெயந்தி சகாரி ரோஜ்கார் யோஜனா திட்டம் 2010&2011ன் கீழ் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சிக்கு ரூ8 லட்சத்து 26 ஆயிரத்து 268 நிதி ஓதுக்கீடு கிடைத்துள்ளது. இதில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக 10 பயனாளிகளுக்கு ரூ84420ம், தனிநபர் கடன் 8 பயனாளிகளுக்கு ரூ3 லட்சத்து 60 ஆயிரமும், நகர்புற பெண்கள் சுயவேலைவாய்ப்பு திட்டத்தில் (ஊனமுற்ற பெண்கள்) 8 பயனாளிகளுக்கு ரூ. 2 லட்சத்து 70 ஆயிரமும், பயிற்சி மற்றும் சிக்கன நாணய சங்கம் அமைக்க 16 பயனாளிகளுக்கு ரூ90048ம் இதர செலவுகளுக்கு க்ஷீ 23,800ம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.