Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவில்பட்டி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை

Print PDF

தினகரன்               20.11.2010

கோவில்பட்டி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை

கோவில்பட்டி, நவ. 20: கோவில்பட்டி நகராட்சியில் நகர் மன்ற அவசர கூட்டம் நடந்தது. கோவில்பட்டி நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நகர்மன்ற அவசர கூட்டம் நடந்தது. நகராட்சி சேர்மன் மல்லிகா தலைமை வகித் தார். துணை சேர்மன் சந்திரமவுலி, கமிஷனர் விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியவுடன் காங்கிரஸ் கவுன்சிலர் மதி, தனது வார்டில் எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டு வரும் பஸ் நிறுத்தம் பணியை ஒரு வாரமாக நிறுத்தி வைத்துள்ளனர், இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

கமிஷனர்: நகராட்சி பொறியாளரிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கவுன்சிலர் தெய்வேந்திரன்: நகராட்சி மார்க்கெட்டில் 10 கடைகள் கட்டப்பட்டு வருவது யாருடைய அனுமதியில் கட்டப்படுகிறது. மார்க்கெட்டிலும் கடைகளின் ஆக்கிரமிப்பால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

சேர்மன்: எந்த இடத்தில் தவறு நடந்தாலும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதையடுத்து கவுன்சிலர்கள் செல்வமணி, கருணாநிதி, ராஜேந்திரன், தெய்வேந்திரன், பவுன்மாரியப்பன் ஆகியோர் நகராட்சி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகளால் மார்க்கெட்டிற்குள் பொதுமக்கள் செல்ல முடியவில்லை. 10 அடி கொண்ட கடையை நீடித்து 50 அடியில் கடை வைத்துள்ளனர். உடனடி யாக மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். அனைத்து கடை களின் ஆக்கிரமிப்புகளையும் ஒட்டு மொத்தமாக அகற்ற வேண்டும் என்றனர்.

கமிஷனர்: மார்க்கெட் டில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இதையடுத்து தெரு விளக்குகள் அமைப்பதற்கான மின்வாரியத்திற்கு வழங்குவதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரியதில் ஒப்பந்தப்புள்ளிகள் வர பெற்றுள்ள தீர்மானத்தை பொருளாக வைத்தது குறித்து கவுன்சிலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை எனவும், இந்த தீர்மானத்தை ஒத்தி வைக்க கோரி பெரும்பாலான கவுன்சிலர்கள், சேர்மன், கமிஷனரின் இருக்கைக்கு சென்று கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில்பட்டியில் நடந்த நகராட்சி அவசர கூட்டத்தில் தீர்மானத்தை ஒத்தி வைக்க கோரி கவுன்சிலர்கள் சேர்மனை முற்றுகையிட்டனர்.

‘கவுன்சிலர் வெளிநடப்பு‘

விவாதம் நடந்து கொண்டிருந்தபோது 11வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் செல்வமணி, தனது வார்டில் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் விடப்படுவதாகவும், அதுவும் சீராக விநியோகம் இல்லை எனவும், அடி பம்பில் அடித்தாலும் தண்ணீர் வருவதில்லை என்றும், குடிநீர் தொடர்பாக சேர்மனிடம் தொலைபேசியில் தெரிவித்தும் நடவடிக்கை