Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகரில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வலியுறுத்தல்

Print PDF

தினமணி           20.11.2010

நகரில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வலியுறுத்தல்

மன்னார்குடி , நவ. 19: மன்னர்குடி நகரின் பிரதான சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

மன்னார்குடி நகர்மன்றத்தின் அவசரக் கூட்டம் தலைவர் (பொ) ஆர். தமிழரசி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, ஆணையர் எஸ். மதிவாணன், பொறியாளர் ஏ. முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

.வி.பி.கோபி, மு. சிவக்குமார், எஸ். கண்ணதாசன்: அண்மையில் பெய்த மழையால் பந்தலடி, ஆசாத் தெரு, பெரிய கம்மாளத் தெரு ஆகிய பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்பட்டுள்ளனர். மேலும், தொற்றுநோய் பரவும் ஆபத்தும் உள்ளது.

. சுதா: நகராட்சித் திட்டப் பணி, பொதுநிதி குறித்த தகவல்களை அறிக்கையாக உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும்.

எம்.எஸ். வீரக்குமார், எம். ராஜாசந்திரசேகரன்: சிங்காரவேலு உடையார் தெரு கழிவுநீர் ஓடை, சட்டிருட்டி வாய்கால் ஆகியவை தூர்வாரி சீரமைக்கப்படாததால், மழைக் காலங்களில் நகரப் பகுதி குடியிருப்புகளில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வருகிறது.

. ஆனந்தராஜ்: நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அடிப்படைப் பணிகள் ஏதும் நடைபெறவில்லை. திட்டப் பணிகள் குறித்து உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்யாமல், கூட்டத்தில் கொண்டு வரப்படும் தீர்மானங்களை எதிர்க்கிறோம்.

கை. கலைவாணன்: நகராட்சிக்கு சொந்தமான ஜேசிபி வாகனத்தை பழுது நீக்கி, இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே. வடுகநாதன்: நகரப் பகுதியில் துப்பரவுப் பணி மேற்கொள்ள ஒப்பந்தம் பெற்றவர் வேறு மாநிலத்தில் உள்ளார். புதிதாக மாற்று நிறுவனத்திற்கு பணி செய்ய ஒப்புதல் வழங்க வேண்டும். தலைவர் (பொ) ஆர். தமிழரசி: மழை நீரை உடனுக்குடன் அப்புறப்படுத்த உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய தகவல்கள் உறுப்பினர்களுக்கு தபால் மூலம் வழங்கப்படும், ஜேசிபி வாகனத்தை இயக்க உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மழைக் காலத்தை முன்னிட்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நகராட்சி சார்பில் முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றார்.