Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தெருவிளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கியது நகரம் ஆணையாளரிடம் புகார்

Print PDF

தினகரன்             24.11.2010

தெருவிளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கியது நகரம் ஆணையாளரிடம் புகார்

பொள்ளாச்சி, நவ. 24: பொள் ளாச்சி நகரில் தெருவிளக்குகள் எரியாததால் பல்வே று பகுதிகள் கடந்த 20 நாட்க ளாக இருளில் மூழ்கியுள்ளதாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் நகராட்சி ஆணையாளரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள் ளது.

பொள்ளாச்சி நகராட்சியி ன் 36 வார்டுகளுக்குட்பட் ட பகுதிகளிலுல் 3 ஆயிர த்து 800 குழல் விளக்குகள், 500 சோடியம் விளக்குகள், 200 மெர்க்குரி விளக்குகள், 9 உயர் மின் கோபுர விளக்குகள் என மொத்தம் சுமார் 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் உள்ளன. இவற்றை பராமரிக்கும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் நிறுவனம் பராமரிப்பு பணியில் அலட்சியமாக இருந்து வருவ தால் பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் அதிகளவில் வர த் துவங்கியுள்ளன.

இந்நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவையின் சார்பில் அதன் தலைவர் வெள்ளை நடராஜ் நகராட்சி ஆணையாளர் பூங் கொடி அருமைக்கண்ணிடம் நேற்று புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், கடந் த சில மாதங்களாகவே நகரில் தெரு விளக்குகள் சரிவர பராமரிப்பதில்லை. இதுதொடர் பாக நகராட்சி கூட்டங்களில் கவுன்சிலர்கள் பலரும் முறையிட்டுள்ளனர். இருந்தபோதிலும் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. கூலித் தொழிலாளர்களும், வாடகை வீடுகளும் நிறைந்த குமரன் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் உள்ளன. அதில் பாரத் நகரில் 4, குமரன் நகர் மெயின் ரோட்டில் 3, நடுநிலைப்பள்ளி அருகே 2, ரங்கசாமி லே அவுட்டில் 3, கே.வி.ஆர். நகரில் 2 என மொ த்தம் 14 தெரு விளக்குகள் பழுதடைந்து கடந்த 20 நாட்களுக்கும் மேலாகிறது. இதை சீரமைத்துக் கொடுக்கும்படி தெரு விளக்குகளை பராமரிக்கும் தனியாரிடமும், நகரா ட்சி அதிகாரிகளிடமும் பல முறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பாரத் நகரை ஒட்டிய பகுதியில் அகல ரயில்பாதை பணிக்காக தண்டவாளங்கள் எடுக்கப்பட்ட நிலையில் புதர்க ள் அதிகளவில் வளர்ந்துள்ளது. அதில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து விடுகின்றன. இரவு நேரங்களில் தெரு விளக்குகள் எரியாததால் வெளிச்சம் இன்றி அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே விரைவில் தெருவிளக்குகளை சரி செய்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.