Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கனமழையால் தெருவிளக்குகள் பழுது சீர் செய்ய பேரூராட்சி முடிவு

Print PDF

தினகரன்            24.11.2010

கனமழையால் தெருவிளக்குகள் பழுது சீர் செய்ய பேரூராட்சி முடிவு

கரூர், நவ.24: புன்செய்தோட்டக்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் கனமழையால் பழுதான தெருவிளக்குகளை சீர் செய்ய பேரூராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புன்செய்தோட்டக்குறிச்சி பேரூராட்சி கூட்டம் தலைவர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ரமேஷ், செயல் அலுவலர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தனர். உறுப்பினர்கள் முருகன், தமிழரசி, முரளி, அன்பாகன், பெரியண்ணன், சசிகலா, நல்லசாமி, பழனிச்சாமி, முத்துசாமி, சக்திவேல், அன்னபூரணி கலந்து கொண்டனர்.

கனமழை காரணமாக இடி விழுந்ததில் ஆவாரங்காட்டுபுதூரில் 15மின்விளக்குகள், கீழ ஒரத்தையில் 8மின்விளக்குகள், அய்யம்பாளையத்தில் 16, காட்டூரில் 6, அம்மாபட்டியில் 5, மூனு£ட்டுப்பாளையத்தில் 5 உட்பட 55 தெருவிளக்குகள் பழுதடைந்தது. இதனை சீர்செய்ய தேவையான தளவாடங்களை வாங்குவது பொது நிதி திட்டத்தில் தர்மராஜபுரம், கணபதிபாளையம்புதூர், ஆவாரங்காட்டுப்புதூர், பகுதிகளில் உள்ள தெரு கைப்பம்புகளில் புதிய மினிபவர் மின்மோட்டார் அமைப்பது, அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் தோட்டக்குறிச்சி மேல்நிலைத் தொட்டி வளாகத்தில் கட்டப்பட்ட சமுதாய கூடத்திற்கு வாடகையை குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பது, பேரூராட்சி அலுவலக பதிவறையில் உள்ள மின் இணைப்புகளை அலுவலகம் முன்புறம் இடமாற்றம் செய்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.