Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

413 பேருக்கு பணி நியமன ஆணைகள்: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

Print PDF

தினமணி                24.11.2010

413 பேருக்கு பணி நியமன ஆணைகள்: மு..ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, நவ.24: சென்னை தியாயகராய நகரில் நடைபெற்ற மாநகராட்சி விழாவில் 413 பேருக்கு பணி நியமன ஆணைகளை துணை முதல்வர் மு..ஸ்டாலின் வழங்கினார்.

பணி நியமன ஆணைகளை வழங்கி அவர் பேசியதாவது:

இந்த விழாவில் சென்னை மாநகராட்சியில் பொது சுகாதாரத்துறையில் 238 பேருக்கு மலேரியா தொழிலாளர்களாகவும், மின்துறையில் 175 பேருக்கு மின் தொழிலாளர்களாவும் என மொத்தம் 413 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன.

2006-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி மேயராக மா.சுப்பிரமணியன் பொறுப்பேற்ற பிறகு கடந்த 4 வருடங்களில் சென்னை மாநகராட்சி சார்பில் 1266 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளும், 1042 பேருக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நேரடி பணி நியமனமும் வழங்கப்பட்டன. 2016 பேர் சென்னை மாநகராட்சியில் கடந்த 4 வருடங்களில் காலமுறை ஊதிய விகிதத்தில் பணிவரன்முறைப்படுத்தப்பட்டார்கள். 2232 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, பணியிடங்கள் நிரப்பப்பட்டும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வந்த 2310 தினக்கூலி பணியாளர்கள் பணி நிரந்தரமும் செய்யப்பட்டுள்ளார்கள். கடந்த 4 வருடங்களில் பல்வேறு நிலைகளில் சென்னை மாநகராட்சியில் 8 ஆயிரத்து 866 பேர் பயனடைந்துள்ளனர்.

திமுக ஆட்சியில் கடந்த 4 வருடங்களில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 466 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என மு..ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.