Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சேலத்தில் நில மோசடிகளை தடுக்க வெப்சைட் விதி மீறி கட்டப்பட்ட 80 கட்டடங்களுக்கு நோட்டீஸ் நகர ஊரமைப்புத் துறை அதிரடி

Print PDF

தினகரன்                  02.12.2010

சேலத்தில் நில மோசடிகளை தடுக்க வெப்சைட் விதி மீறி கட்டப்பட்ட 80 கட்டடங்களுக்கு நோட்டீஸ் நகர ஊரமைப்புத் துறை அதிரடி

சேலம், டிச.2: சேலம் சுப்ரமணியம் நகரில் அமைந்துள்ள நகரமைப்பு மண்டல அலுவலகத்தில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. இதில் நகர ஊரமைப்புத் துறை இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் கலந்து கொண்டு மனுக்களைப் பெற்றார். மேலும் நகரமைப்பு அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தற்பொழுது நிலத்தில் முதலீடு செய்யும் போக்கு மக்களிடம் அதிகளவில் காணப்படுகிறது. நடுத்தர மக்கள் தவணைத் திட்டங்களில் நிலம் வாங்குகின்றனர். நில விற்பனையில் ஈடுபடும் பல தனியார் நிறுவனங்கள் கவர்ச்சி விளம்பரத்தை வெளியிடுகின்றன. இதில் பல மோசடிகளும் நடப்பதாக மக்கள் புகார் அளிக்கின்றனர். இது போன்ற மோசடிகளைத் தடுக்கும் விதமாக நகர ஊரமைப்புத் துறை மூலம் சேலம் மண்டல அளவிலான தகவல்களை உள்ளடக்கிய வெப்சைட் வெளியிடப்பட உள்ளது.

இதில் குறிப்பிட்ட பகுதிகளில் அனுமதி பெற்ற பிளாட்டுகள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கும். நிலம் வாங்க உள்ளவர்கள் குறிப்பிட்ட பிளாட் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதை வெட்சைட்டில் தெரிந்து கொள்ள முடியும். மண்டல அலுவலகத்தில் ரூ200 கட்டினால் குறிப்பிட்ட பிளாட்டுக்கான லே அவுட் காப்பியைப் பெறலாம்.

அனுமதி பெறப்படாத பிளாட்டுகளை வாங்கும் பட்சத்தில் அவைகளுக்கு தண்ணீர், சாக்கடை உள் ளிட்ட வசதிகள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செய்து தரப்படாது. எனவே மக்கள் நிலம் வாங்குவதற்கு முன் அனுமதி பெறப்பட்டதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும். நகரம் மற்றும் மலைப்பகுதியில் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 80 கட்டங்கள் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். இது குறித்து விளக்கம் பெறப்பட்ட பின்னர் மீறிய கட்டடங்கள் இடிக்கப்படும். மலைப்பகுதியில் 250 சதுர அடி வரை கட்டடம் கட்ட உள்ளாட்சி அமைப்பு அனுமதிக்கும். 300 சதுர அடி கட்டடத்துக்கு ஆட்சியர் தலைமையிலான குழு அனுமதிக்கும். 300 சதுர அடிக்கு மேல் கட்டடம் கட்டும் பொழுது எங்களிடம் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறப்படாத மலைப்பகுதி கட்டடங்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நகர ஊரமைப்புத் துறை இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் கூறினார்.