Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மழைநீரை அகற்ற முடியாமல் மாநகராட்சி திணறல்

Print PDF

தினமலர்             02.12.2010

மழைநீரை அகற்ற முடியாமல் மாநகராட்சி திணறல்

தூத்துக்குடி : தூத்துக்குடி பகுதியில் தொடர்ந்து பெ ய்து வரும் மழையால், பல பகுதிகள் தீவு போல் காட்சி அளித்து வருகிறது. அமைச்சர், மாநகர மேயர் ஆகியோர் வசித்து வரும் போல்பேட்டை, ஸ்டேட் பாங்க் காலனி உட்பட பல இடங்களில் பொதுமக்கள் செல்ல முடியாத அள விற்கு மழைநீர் ரோடுகளில் தேங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக தூத்துக்குடி மாநகர் பகுதியில் மழை கொ ட்டி தீர்த்து வருகிறது. சாதாரண தூரல் மழை பெய்தாலே மழை நீரினால் தாக்குபிடிக்க முடியாத தூத்துக்குடி மாநகர் பகுதி, கடும் மழையால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மாநகர் பகுதியில் தண்ணீர் தேங்காமல் ஏதாவது ஒரு ரோடு இருந்தால், அது நிச்சயம் ஆச்சரியமானதாகும். அந்தளவிற்கு மாநகர் பகுதி முழுவதும் மழைநீர் தெப்பம் போல் பெரும்பாலான இடங்களில் தேங்கியுள்ளது.

இத்துடன் பல இடங்களில் பாதாளசாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் எல்லாம் குட்டை குட்டையாக தண்ணீர் தேங்கியுள்ளது. அறைகுறையாக மூடப்பட்டுள்ள பள்ளங்களில் ஒரு சில இடங்களில் தோன்றியுள்ள மரணக்குழிகள் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளை காயப்படுத்தி வருகிறது. ஒரு சில பகுதிகளில் உள்ள ரோடுகள் எல்லாம் உழவு செய்த வயல்கள் போல் காட்சி அளித்து வருகிறது. தெற்கு சம்பந்தமூர்த்தி தெருவில் மழை காலம் என்று கூட பார்க்காமல் ரோடு போடுவதற்காக பரப்பபட்ட செம்மண் முழுவதும் மழைநீரில் கரைந்து கழிவுநீர் வாய்காலில் வீணாக சென்று வடுகிறது. அதுமட்டுமல்லாமல் அந்த ரோட்டில் தற்போது குவித்து வைக்கப்பட்டுள்ள கற்களினால், அந்த வழியாக யாரும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகரத்தின் புறநகர் பகுதியாகவும், வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் பகுதியாகவும் இருப்பது பி அன்டு டி காலனியாகும். இந்த காலனிக்கு செல்வது என்றால் பக்கிள் ஓடையை கடந்து தான் செல்ல வேண்டும்.

பக்கிள் ஓடையில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக தண்ணீர் சரியான முறையில் செல்லாததால் பி அன்ட் டி காலனிக்கு செல்லும் பிராதான நுழைவு பகுதியில் உள்ள தரைமட்ட பாலத்தில் சில அடி தூரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பல மீட்டர் தூரத்திற்கு சுற்றி செல்ல வேண்டியுள்ளது. பக்கிள் ஓடையில் உள்ள அடைப்புகளை சரி செய்தால் இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்றாலும், இதுவரையிலும் அதற்கான முயற்சிகள் செய்யப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதேபோல் ஸ்டேட் பாங்க் காலனி, போல்பேட்டை போ ன்ற பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பெய்த மழைநீர் வெளியேற வழியில்லாமல் பல இடங்களில் தேங்கியுள்ளது. தூத்துக்குடி தொகுதி எம்.எல். ஏ.,வும், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவனின் வீடு உள்ள பகுதியான போல்பேட்டை பகுதியில் உள்ள பெரிய ரோடுகள் பலவற்றில் தண்ணீர் தேங்கியுள்ளதோடு, சேறும் சகதியுமாக காட்சி அளித்து வருகிறது. இதே நிலையில் தான் மேயர் கஸ்தூரி தங்கத்தின் வீடு அமைந்துள்ள ஸ்டேட் பாங்க் காலனி பகுதியிலும் காணப்படுகிறது.

மேயர் வீட்டினை சுற்றியுள்ள நான்கு தெருக்களிலும் மழை நீர் பல நாட்களாக தேங்கியுள்ளது. அந்த பகுதிவாசிகள் தங்களது வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்றால் பெரிய சாகசம் செய்து தான் ரோட்டில் நடந்து செல்ல வேண்டும். தொகுதியின் எம்.எல் .ஏ., மாநகர மேயர் வீடுகள் அø மந்துள்ள பகுதிகளில் உள்ள ரோடுகள் எல்லாம் அலங்கோலமாக காட்சி அளிப்பதை கொ ண்டே, தூத்துக்குடி மாநகராட்சியின் தரம் எவ்வாறு உள்ளது என்பதை எடைபோட்டு விடலாம் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாநகர் பகுதியில் இதுபோன்று மழைநீர் தேங்கி வரும் சம்பவம் பல ஆண்டுகளாக தொ டர்ந்து வந்தாலும் அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் இத ற்காக நிரந்தர தீர்வு காணும் முயற்சியில் ஈடுபாடு காட்டவில்லை. மழை தண்ணீர் தேங்கும் சமயங்களில் மட்டும் மாநகராட்சியில் உள்ள ஒரு சில கழிவுநீர் வெளியேற்றும் லாரிகளை கொண்டு தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றி வருகின்றனர். இந்த லாரிகளை கொண்டு கழிவுநீர் குழாய்களில் திடீரென ஏற்படும் அடைப்புகளை மட்டுமே சரி செய்ய முடியுமே தவிர, மாநகரின் அனைத்து பகுதியிலும் தேங்கியுள்ள மழை தண்ணீரை உறிஞ்சி வெளியேற்ற முடியாது என்றும், ஒரு வேளை இதே முறையை தொடர்ந்தால் இன்னும் ஆயிரம் லாரிகளை கொ ண்டு தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றினாலும் மழை தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு எட்ட முடியாது என்று பொதுமக்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.