Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெடுஞ்சாலையில் மின் விளக்குகளை சீரமைக்க ரூ. 30 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினமணி                    06.12.2010

நெடுஞ்சாலையில் மின் விளக்குகளை சீரமைக்க ரூ. 30 லட்சம் ஒதுக்கீடு

தேனி, டிச. 5:தேனி நகராட்சிப் பகுதிக்கு உள்பட்ட நெடுஞ்சாலைகளில் மின் விளக்குகளை சீரமைப்பதற்கு நகராட்சி நிர்வாகம் ரூ. 30 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.

தேனியில், பெரியகுளம் சாலை, கம்பம் சாலை, மதுரை சாலை ஆகிய மாநில நெடுஞ்சாலைகளில் தார் தளம் அகலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, சாலையோரங்களில் இருந்த தெருவிளக்குகள், மின் கம்பங்கள் ஆகியவை அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இல்லாத வகையிலும், போதுமான வெளிச்சம் கிடைக்கும் வகையிலும், மின் விளக்குகளை சாலையின் மையப் பகுதியில் அமைக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.இதன்படி நேரு சிலையை மையமாக கொண்டு பெரியகுளம் சாலையில் உள்ள ரயில்வே கிராஸ், கம்பம் சாலையில் உள்ள கொட்டகுடி ஆற்றுப் பாலம், மதுரை சாலையில் உள்ள பங்களா மேடு ஆகிய பகுதிகள் வரை சாலைகளின் மையப் பகுதியில் தடுப்பு மேடை அமைக்கப்பட்டு வருகிறது.

விரைவில் இங்கு மின் கம்பங்கள் அமைத்து 150 வாட்ஸ் மெட்டல் ஹைடு விளக்குகள் பொருத்தப்படும். இதற்கென நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ. 24 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மதுரைச் சாலையில் பங்களா மேடு பகுதியில் இருந்து கருவேல்நாயக்கன்பட்டி வரை நெடுஞ்சாலை ஓரத்தில் புதிததாக தெருவிளக்குகள் அமைப்பதற்கு ரூ. 6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என நகராட்சிப் பணியாளர்கள் தெரிவித்தனர்.