Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாதாள சாக்கடை திட்டம் கழிவுநீர் சேமிப்பு டேங்க் அமைக்க மக்கள் எதிர்ப்பு

Print PDF

தினகரன்              07.12.2010

பாதாள சாக்கடை திட்டம் கழிவுநீர் சேமிப்பு டேங்க் அமைக்க மக்கள் எதிர்ப்பு

ஈரோடு, டிச. 7:ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவு சிங் யூனிட் அண்ணாநகர் வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

தற்போது பெரியசேமூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை கட்டும் பணி நடந்து வரு கிறது. இந்நகராட்சிக்குட்பட்ட 9 மற்றும் 10ம் வார்டுக்குட்பட்ட பகுதிகள் மற் றும் அருகாமையில் உள்ள வீரப்பன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுநீரை அண்ணாநகர் ரிசர்வ் சைட் பகுதியில் சேமித்து வைக்கும் வகையில் திட்டம் தயாரித்துள்ளனர். இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு திறந்தவெளி கிணறும், ஆழ்குழாய் கிணறும் உள்ளன. ஏற்கனவே சாயப்பட்டறைகளால் இங்குள்ள ஆழ்துளை கிணறுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ரிசர்வ் சைட்டுக்கான தொகையை வீட்டு உரிமையாளர்களால் வீட்டுவசதி வாரியத்திற்கு செலுத்தப்பட்டு வாங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பூங்கா கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த இடத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான டேங்க் அமைக்கப்பட்டால் இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், தற்போது எங்களது உபயோகத்தில் உள்ள திறந்தவெளி கிணற்று நீரும், ஆழ்குழாய் கிணற்றுநீரும் கடுமையாக பாதிக்கும். சுற்றுச்சூழலை பாதிப்பதுடன், துர்நாற்றமும் ஏற்பட்டு, நீர்வளத்தையும் இந்த பாதாள சாக்கடை சேமிப்பு டேங்க் பாதிப்படைய செய்யும். எனவே வேறு இடத்திற்கு பாதாள சாக்கடை திட்ட டேங்க்கை அமைக்க வேண்டும். இதுகுறித்து ஏற்கனவே இரண்டு முறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் இப்பிரச்னையில் நேரடியாக தலையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.