Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேனி நகர் மையப் பகுதியில் ரூ24 லட்சத்தில் மின் விளக்குகள்

Print PDF

தினகரன்               07.12.2010

தேனி நகர் மையப் பகுதியில் ரூ24 லட்சத்தில் மின் விளக்குகள்

தேனி, டிச. 7: தேனி நகரின் மையப்பகுதியில் ரூ.24 லட்சம் செலவில் உயர்மின் அழுத்த மின் விளக்குகள் பொருத்த நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

தேனி நகரின் முக்கிய சாலைகளான மதுரை சாலை, கம்பம் சாலை தற்போது அகலப்படுத்தப்பட்டு சாலையின் நடுவே கான்கிரீட்டினால் ஆன தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து சாலையினை ஒட்டியிருந்த மின் கம்பங்கள் சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டன. பெரியகுளம் சாலையிலும் சாலை அகலப்படுத்தி மின் கம்பங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

சாலை அகலப்படுத்தி மின் கம்பங்கள் சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டதால் மின் ஒளி சாலையின் மையப்பகுதியில் கிடைக்காமல் சாலைகளில் பயணிப்பவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. நகரின் சாலையை இரண்டாக பிரித்து அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சுவற்றில் மின் விளக்குகளை அமைத்தால் மின் ஒளி சாலையின் இருபுறமும் நன்கு பரவும் என தேனி&அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து சாலையின் நடுவே உயர்அழுத்த மின் விளக்குகள் பொருத்த உள்ளது. இதற்கான சர்வே பணி நடந்து வருகிறது.

இதற்காக ரூ.24 லட்சம் நிதி பொது நிதியில் இருந்து ஓதுக்கவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. தேனி நகரில் கம்பம் சாலையில் கொட்டக்குடி ஆற்று பாலம் வரையிலும், மதுரை சாலையில் பங்களா மேடு வரையிலும், பெரியகுளம் சாலையில் ரயில்வே கேட் வரையிலும் சாலையின் நடுவே மின் விளக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பங்களாமேடு பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் தாண்டி கருவேல்நாயக்கன்பட்டி வரை சாலை யின் இருபுறமும் தெரு மின்விளக்குகள் பொருத்த ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கவும் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.