Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தமிழ் பெயர் சூட்டப்படும் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு: மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தகவல்

Print PDF

மாலை மலர் 28.08.2009

தமிழ் பெயர் சூட்டப்படும் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு: மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தகவல்

சென்னை, ஆக. 28-

சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் மா. சுப்பிரமணியன் தலைமையில் இன்று நடந்தது.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

திருவேங்கடம் (காங்.):- சென்னையில் வீடுகளுக்கு பழைய எண், புதிய எண் என்று இருப்பதை ஒரே எண்ணாக மாற்றி வழங்க வேண்டும். எழும்பூர் உள்பட பலபகுதிகளில் வீடுகள் இல்லாமல் பலர் குடிசைகளில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு வீட்டு வசதிசெய்து கொடுக்கவேண்டும்.

மேயர் மா. சுப்பிரமணியன்:- சென்னையை குடிசை இல்லா நகராக மாற்றுவதற்கு ஏற்கனவே மத்திய அரசு ரூ.130 கோடி ஒதுக்கியது. 2-வது கட்டமாக ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 230 சதுர அடி நிலம் இருப்பவர்களுக்கு வீடுகட்ட மானியம் வழங்கப்படும் என்பது மத்திய அரசின்விதி.

ஆனால் சென்னையில் குடிசைவாசிகளிடம் 150 சதுர அடிக்கும் குறைவாகவே நிலம் இருக்கிறது. எனவே அந்த இடத்தில் கீழ்தளமும், மேல்தள கட்டிடமுமாக வீடு கட்டுவதற்கு அனுமதிக்கக்கோரி மத்திய அரசுக்குகடிதம் எழுதப்பட்டுள்ளது.

சுபா சந்திரபோஷ் (தி.மு..):- பன்றிக்காய்ச்சலை தடுக்க மாநகராட்சி என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேயர்:- சென்னையில் பன்றிக்காய்ச்சல் நோய்பரவாமல் தடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை 30 குழுக்கள் அமைத்து சோதனை நடத்தி வருகிறது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பன்றிகள் அழிக்கப்பட்டுள்ளன.

ஜெயராமன் (பா...):- பன்றிக்காய்ச்சல் பரவாமல்தடுக்க மாநகராட்சி தினமும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யவேண்டும். சென்னையில் எந்தஅரசியல் கட்சிக்கும் பாரபட்சம் இல்லாமல் ரோட்டு ஓரங்களில் வைக்கப்படும் பேனர்களை அகற்றவேண்டும். புகையில்லா சென்னையை உருவாக்குவதற்கு மாநகராட்சி தேவையான நடவடிக்கை வேண்டும்.

சைதைரவி (காங்.):- பன்றிக்காய்ச்சல் பரிசோதனை மையம் அனைத்து வசதிகளுடன் அனைத்து மண்டலங்களிலும் அமைக்கப்பட வேண்டும். சுவரொட்டிகளுக்கு தடைவிதித்த பிறகு அண்ணா சாலையில் சுவர் விளம்பரம் தென்பட தொடங்கியுள்ளது. இதைதடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பின்னர் கூட்டத்தில் இந்தநிதியாண்டில் தமிழிலில் பெயர் சூட்டப்படும் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக 7 ஆயிரம் மோதிரம் வாங்க ரூ.1 கோடியே 5 லட்சம் நிதி ஒதுக்கி அனுமதிவழங்கப்பட்டது.