Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பரபரப்பு நீடிக்கிறது மீன் வியாபாரிகள் மீண்டும் முற்றுகை

Print PDF

தினகரன்            09.12.2010

மாநகராட்சி பரபரப்பு நீடிக்கிறது மீன் வியாபாரிகள் மீண்டும் முற்றுகை

கோவை, டிச. 9: கோவை மாநகராட்சி அலுவலகத்தை மாநகராட்சி மீன் வியாபாரிகள் நேற்றும் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகராட்சி சார்பில் உக்கடம் செல்வபுரம் ரோட்டில் 1.37 கோடி ரூபாய் செலவில் புதிதாக ஒருங்கிணைந்த மீன் மார்க் கெட் கட்டப்பட்டுள்ளது. ஏசி வசதியுடன் கூடிய இந்த கட்டடத்தில் 68 கடை அமைந்துள்ளது.

இந்தகடைகளை வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்ய மின் ஏலத்திற்கான விண் ணப்ப பதிவு நடக்கிறது.தற் போது உக்கடத்தில் செயல்பட்டு வரும் மீன் மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கு முன்னுரி மை தரவேண்டும்.

வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கீடு செய்த பின்னரே, மற்றவர்களுக்கு கடை ஒதுக்கவேண்டும் என மாநகர வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் வலியுறுத்தப்பட் டது. நேற்று முன் தினம், இது தொடர்பாக வியாபாரிகள், மாநகராட்சி கமிஷனரை சந்சித்து பேசினர். பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்படவில்லை. அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.

இந்நிலையில், நேற்றும் வியாபாரிகள் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் குவிந்தனர்.கடை ஒதுக்கீட் டில் வியாபாரிகளின் முடி வை ஏற்கவேண்டும். இல்லாவிட்டால் வியாபாரிகள் மாநகராட்சிக்கு செலுத்திய 50 ஆயிரம் ரூபாய் வரைவோ லையை திருப்பி தரவேண் டும் என வலியுறுத்தினர்.

ஆனால் இதற்கு மாநகராட்சி நிர்வாகம் சம்மதிக்கவில்லை. இதில் அதிருப்தியடைந்த வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த னர். காலை முதல் மாலை வரை சுமார் 8 மணி நேரம் முற்றுகை நடந்தது. வியாபாரிகள் முற்றுகையால் மாநகராட்சி அலுவலக வளாகத் தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

22 பெண்கள் உட்பட 120 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். மாநகர மீன் வியாபாரிகள் சங்க தலைவர் சுபேர் கூறுகையில், "உக்கடத்தில் செயல்பட்டு வரும் கடையில் 70க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை நடத்தி வந்தனர். சில கடை இடிந்து விட்டது. இதனால் வியாபாரிகள் சிலர் கடை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

புதிதாக மீன் மார்க்கெட் திறக்கும் போது இங்கேயுள்ள வியாபாரிக ளுக்கு கடை ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்கள். ஆனால், மின் ஏல முறை யை காரண மாக காட்டி இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் செலுத்திய வரைவோலையை திருப்பி தர மறுக்கிறார்கள். எங்களு க்கு கடை ஒதுக்கீடு செய்யாவிட்டால் ஏற்கனவே உள்ள மீன் மார்க்கெட்டில் தொடர் ந்து கடை நடத்துவோம். மின் ஏல முறையால் வியாபாரிகள் அல்லாத நபர்கள் கடையை கைப்பற்றும் வாய் ப்புள்ளது, " என்றார். மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், " இந்த ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் ஒப்பந்தபடி கடைகள் ஒதுக்கப்படும்.

இதில் இடைத்தரகர்கள் சிலர் ஏலம் தொடர்பாக தவறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் ஏலத் தில் பங்கு பெறுபவர்கள் அவர்களை நம்ப வேண் டாம்.

புதிய மீன் மார்க்கெட் கடைகளுக்கான ஏலம் திட்டமிட்டபடி 9ம் தேதி(இன்று) காலை 10 மணி முதல் 11 மணிக்குள் ஏலம் கண்டிப் பாக நடக்கும். என்று கோ வை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தங்களுக்கு தகவல் வேண்டுமாயின் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் குறியீடு மற்றும் ஐடி குறியிடு போன்றவற்றினைக் கொண்டு நீஷீவீனீதீணீtஷீக்ஷீமீநீஷீக்ஷீஜீஷீக்ஷீணீtவீஷீஸீ.நீஷீனீ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். என்றும் கூறினார்.

முறைப்படி கடைகள் ஒதுக்கப்படும். ஏற்கனவே கடை நடத்தியவர்களுக்கு ஒதுக்கீடு செய்த பின்னர் தான் மற்றவர்களுக்கு கடை ஒதுக்கப்படும் என்பதை ஏற்க முடியாது, " என்றார். கோவை உக்கடம் மீன் மார்க்கெட் வியாபாரிகள் டெண்டர் பணத்தை திருப்பித்தர கோரி நேற்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.