Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை மீன் மார்க்கெட் மூடல் மாநகராட்சிக்கு வியாபாரிகள் எதிர்ப்பு

Print PDF

தினகரன்                    10.12.2010

கோவை மீன் மார்க்கெட் மூடல் மாநகராட்சிக்கு வியாபாரிகள் எதிர்ப்பு

கோவை, டிச. 10: புதிய மீன் மார்க்கெட்டில் கடை ஒதுக் கீடு தொடர்பான விவகாரம் விஸ்வரூபமெடுத்தது. உக்க டம் மீன் மார்க்கெட்டை வியாபாரிகள் மூடினர். கோவை உக்கடத்தில் மாநகராட்சி கட்டடத்தில் மீன் மார்க்கெட் 60 கடையு டன் செயல்படுகிறது.இந்த கடைகளுக்கு மாற்றாக உக்க டம் செல்வபுரம் பைபாஸ் ரோட்டில், 1.37 கோடி ரூபாய் செலவில் புதிதாக மீன் மார்க் கெட் கட்டப்பட்டுள்ளது. ஏசி, இறைச்சி கழிவு நீர் சுத்திகரிப்பு வசதியுடன் இந்த மீன் மார்க்கெட் அமைக்கப்பட்டது. 68 கடை கொண்ட இந்த மீன் மார்க்கெட் கடை களை ஒதுக்கீடு செய்ய மின் ஏலம் (இ ஆக்ஷன்) விடப்பட்டது. இதில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். முறைப்படி கடை ஒதுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது.

ஆனால், இதை மீன் மார்க்கெட்டில் ஏற்கனவே கடை நடத்தி வரும் வியாபாரிகள் ஏற்கவில்லை. மின் ஏல முறை கூடாது, ஏற்கனவே கடை நடத்தும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடை ஒதுக்கவேண்டும்.

இல்லாவிட்டால், கடை கள் பெற, முன் வைப்பு தொ கைக்காக தாங்கள் செலுத்திய வரைவோலை யை திரும்ப தரவேண்டும் என தெரிவித்தனர்.

இது தொடர்பாக மாநகராட்சி பிரதான அலுவலகத்தை நேற்று 2வது நாளாக முற்றுகையிட்டனர். எதிர்ப் பை மீறி நடந்த முற்றுகை காரணமாக, மீன் வியாபாரிகள் 120 பேர் கைது செய்து விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் மின் ஏலம் நடந்தது.ஆன் லைன் மூலம் 120 பேர் கடை கேட்டு விண்ணப்பம் கொடுத் திருந்தனர். டெண்டர் பெட்டி யில்,19 பேர் விண்ணப்பம் கொடுத்திருந்தனர். மின் ஏலத் தில் பிரச்னை ஏற்படாமல் தவிர்க்க, மாநகராட்சி அலு வலக வளாகம் நேற்று போ லீஸ் கட்டுபாட்டில் விடப்பட்டது. மாநகராட்சி அலுவலர்கள் தவிர மற்றவர்கள் மாநகராட்சி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. 70 போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டிருந்தனர்.

மாநகராட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்க, மாநகர மீன் வியாபாரிகள் உக்கடம் மீன் மார்க்கெட்டை மூடி போராட்டத் தில் இறங்கினர். மார்க்கெட் டில் மீன், கருவாடு, கோழி, ஆட்டிறைச்சி கடைகள் மூடப்பட்டது.

கோவை மாநகர மீன் வியாபாரிகள் சங்க தலைவர் சுபேர் கூறுகையில், " உக்கடம் மீன் மார்க்கெட் ஒரு நாள் மூடப்பட்டது. சுமார் 20 டன் மீன் விற்பனை நடக்கவில் லை. சுமார் 50 லட்ச ரூபாய் க்கு விற்பனை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடை நடத்தும் வியாபாரிகளுக்கு புதிய மார்க்கெட்டில் மின் ஏலமின்றி முன்னுரிமை கொடு த்து கடை ஒதுக்கவேண்டும். இதை நாங்கள் வலியுறுத்தி வந்தோம். ஆனால், மாநகரா ட்சி நிர்வாகம் ஏற்கவில்லை. எங்களுக்கு முன்வைப்பு தொகையை திரும்ப கேட்டிருக்கிறோம். பழைய மார்க்கெட்டில் தொடர்ந்து கடைநடத்த திட்டமிட்டிருக்கிறோம், " என்றார்.

மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், " மின் ஏலம் திறக்கப்பட்டது. விண்ணப்பங்களை வரும் 13ம் தேதி இறுதி செய்ய திட்டமிட்டிருக்கிறோம். இடைதரகர்களை தவிர்க்கவே மின் ஏல முறை கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே கடை நடத்தி வரும் வியாபாரிகள், தங்களுக்கு புதிய மீன் மார்க்கெட்டில் முன் பகுதியில் கடை கேட்கிறார்கள்.

அதுவும் மின் ஏல முறை கூடாது என்கிறார்கள். நியாயப்படி அப்படி கடை ஒதுக்க முடியாது. பழைய மீன் மார்க் கெட் கட்டடம் பழுதடைந்து விட்டது. சமீபத்திய மழையில் 4 கடை சரிந்து விட்டது. கட்டடத்தால் உயிர் அபாயம் ஏற்படும் நிலை இருக்கிறது. எனவே பாதுகாப்பு கருதி இடிக்கவேண்டியிருக்கிறது. இருப்பினும் உடனடியாக அதை செய்ய முடியாது. பழைய மீன் மார்க்கெட் இடிக்கப்படும் போது அங்கே காய்கனி மார்க்கெட் கொ ண்டு வரும் யோசனை பரிசீலனையில் இருக்கிறது, " என்றார். புதிய ஏலத்தை எதிர்த்து மின் வியாபாரிகள் நேற்று கடையடைப்பு செய்தனர், இதில் நடந்த உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட வியாபாரிகள்.

மீனுக்கு கிராக்கி

மீன் மார்க்கெட் மூடப்பட்டதால் மீனுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. பொதுமக்கள், ஓட்டல் கடை நிர்வாகத்தி னர் மீன் வாங்க முடியாமல் தவித்தனர். வஜ்ஜிரம், சச் கரா, கிழங்கா, மத்தி, கட்லா, ரோகு, பாற, வாளை, மொய் மீன்கள் பொதுமக்களுக்கு மிக குறைவாகவே கிடைத்தது. கிராக்கி காரணமாக மீன் விலை 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை உயர்ந்தது. உக்கடம் ஒட்டு மொத்த மீன் மார்க்கெட் வழக்கம் போல் இயங்கியது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சைக்கிள் வியாபாரிகள் மீன்களை அதிகளவு பெற்று சென்றனர்.