Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகரங்களில் வார்டு வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் கோபாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

Print PDF

தினகரன்                10.12.2010

நகரங்களில் வார்டு வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் கோபாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

விழுப்புரம், டிச. 10: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிலரங்கம் நடந்தது. விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடாசலம், கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் நடாஜன் மற்றும் விழுப்புரம், கடலூர் மாவட்ட கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள், நகராட்சி கமிஷ்னர்கள் மற்றும் பிறதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இப்பயிலரங்கத்தை தொடங்கி வைத்து மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் கோபாலகிருஷ்ணன் பேசியதாவது:

வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். இப்பணிகளுக்கு அட்டவணை வழங்கப்படும். கணக்கெடுப்பு படிவத்தில் அமைவிடங்கள் பற்றிய விவரம் இருக்கும். நகரங்களில் வார்டு வாரி யாக மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். கிராமத்திற்கு வார்டு நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படிவத்தில் ஒரு பக்கத்திற்கு 8 வரிகள் உள்ளது.

மக்கள் தொகை சார்ந்த கணக்கெடுப்பு என்பது வருவாய்த்துறையை சார்ந்த கிராமங்களை கொண்டு தான் கணக்கெடுக்க வேண் டும். நீலம் மற்றும் கருப்பு மைகொண்ட பேனாவால் எழுத வேண்டும். வேறு மையினால் எழுதினால் ஸ்கேன் செய்தாலும் கணினியில் தெளிவாக பார்க்க முடியாது. ஒரு பக்கத்தில் எட்டு பேருக்கு பதிலாக கூடுதலாக ஒரு நபரை சேர்த்து எழுதினால் கணினியில் முழுவதுமாக தெரியாது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக ஒவ்வொரு மாவட்டத்தி லும் ஒரு மைக் செட் நாங் கள் வழங்கி வருகிறோம்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு நடக்கும்போது படம் மூலம் காட்டும் வசதி இருக்க வேண்டும். இதை 7 மணிநேரம் படமெடுத்து ஒவ்வொரு வகுப்பிற்கும் டிவிடி மூலம் வழங்குகிறோம். பணியினை விளக்குவதற்கு இரண்டு டிவிக்களை வைத்து மக்கள் தொகை கணக்கெடுப்பு சம்பந்தமாக படத்தை போட்டு அனைவருக்கும் விளக்க வேண்டும். இதற்கு உண்டான உபகரணங்கள் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் பேரூராட்சிகளில் உள்ளது. இக்கணக்கெடுப்பு பணிக்கு ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு கொடுத்து நியமிக்கப்பட்டுள்ளது என்றார்.