Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாளை நடக்கவிருந்த நெல்லை மாநகராட்சி கூட்டம் ‘திடீர்’ ஒத்திவைப்பு பின்னணி என்ன?

Print PDF

தினகரன்         15.12.2010

நாளை நடக்கவிருந்த நெல்லை மாநகராட்சி கூட்டம் திடீர்ஒத்திவைப்பு பின்னணி என்ன?

நெல்லை, டிச.15: நெல்லை மாநகராட்சியில் நாளை நடக்கவிருந்த சாதாரண கூட்டம் சில காரணங்களால் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாநகராட்சியில் இம்மாதத்திற்கான சாதாரண கூட்டம் நாளை (16ம் தேதி) நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான தீர்மான நகல்களும் அச்சடிக்கப்பட்டு, அனைத்துக் கவுன்சிலர்களுக்கும் அனுப்பப்பட்டு விட்டன. இந்நிலையில் திடீரென நாளை நடக்கவிருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாத இறுதியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் வருவதாலும், துணை முதல்வர் வருகை இருப்பதாலும், கூட்டத்தை முன்ன ரே நடத்துவதாக மாநகராட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது கூட்டத் தை மீண்டும் மாத இறுதிக்கு ஒத்தி வைத்திருப்பதற்கு, சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

மாநகராட்சியில் சிறப்பு சாலைகள் திட்டத்திற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியை 'முறையாகபயன்படுத்துவது தொடர் பாக சில கவுன்சிலர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். கடந்த 11ம் தேதி இந்நிதி தொடர்பாக ஆளும்கட்சி கவுன்சிலர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் எழுந்துள் ளன. நாளை நடக்கும் கூட்டத்தில் தர்ணா இருப்போம். கூட்டத்தில் நூதன போராட்டங்கள் மேற்கொள்வோம்என 5 கவுன்சிலர்கள் எச்சரித்ததாக கூறப்படுகிறது. மாமன்ற கூட்டத்தில் நடக்கவுள்ள பிரச்னைகளை தவிர்க்கும் வகையில், நாளை நடக்கவிருந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக நெல்லை மேயர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாமன்ற சாதாரண கூட்டம் நாளை(16ம் தேதி) காலை 10.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாநில நிதியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்தளிப்பது குறித்து மாநில நிதிக்குழு ஆணையத்தின் ஆலோ சனை கூட்டம் இன்று (15ம் தேதி) மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் என தகவல் வந்துள்ளது.

இன்று மாலை 5 மணிக்கு ஆணையக்குழு மேயர்களின் கருத்துகளை கேட்க இருப்பதால், கட்டா யம் கலந்து கொள்ள வேண் டிய சூழ்நிலை ஏற்பட்டுள் ளது. இதுகுறித்து மறுநாள் (16ம் தேதி) தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டியதுள்ளது. எனவே 16ம் தேதி நடக்கவிருந்த மாநகராட்சி கூட்டம் வரும் 29ம் தேதி காலை 10.30 மணிக்கு நடை பெறும் என தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.