Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் வாரிய பணியாளர்களுக்கு கழிவுநீரை அகற்றும் பயிற்சி

Print PDF

தினகரன்             23.12.2010

குடிநீர் வாரிய பணியாளர்களுக்கு கழிவுநீரை அகற்றும் பயிற்சி

சென்னை, டிச.23:

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

துப்புரவு பணியாளர்கள் கழிவுநீர் அடைப்பை நீக்குவதற்கோ, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கோ, நுழைவாயிலில் ஆள் இறங்குவதை உயர் நீதிமன்றம் தடை செய்துள்ளது. தமிழக அரசும் இதற்கு தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கழிவுநீர் அடைப்புகளை நீக்கவும், தொட்டிகளை சுத்தம் செய்யவும் தேவையான அதிநவீன இயந்திரங்கள் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது, சம்பந்தமாக பல்வேறு இடங்களில் முகாம்கள் மூலமாகவும், துண்டுபிரசுரம் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் மூலம் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கழிவுநீர் கட்டமைப்பை பராமரிப்பது, அடைப்பை நீக்குவது, முன் எச்சரிக்கை குறித்து டிசம்பர் 3ம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 137 பணியாளர்கள் உள்ளிட்ட 5 குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி ஜனவரி 14ம் தேதி வரை நடக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.