Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பூங்காக்களில் யோகா பயிற்சி

Print PDF

தினமலர்      04.01.2011

மாநகராட்சி பூங்காக்களில் யோகா பயிற்சி

சென்னை : "பொங்கல் பண்டிகைக்கு பின், மாநகராட்சி பூங்காக்களில், பொதுமக்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படும்' என, மேயர் சுப்ரமணியன் கூறினார்.போக்குவரத்து நெரிசல் மிக்க ஜவகர்லால் நேரு சாலை, ஈக்காட்டுதாங்கல் பாலம் அருகில், 80 லட்ச ரூபாய் செலவில், அகலப்படுத்தி, மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன், மேயர் சுப்ரமணியன் ஆகியோர் இப்பகுதியை நேற்று ஆய்வு செய்தனர்.அப்போது மேயர் சுப்ரமணியன் கூறும் போது, "சென்னையில், பனகல் பூங்கா, டவர் பூங்கா, நடேசன் பூங்கா, நேரு பூங்கா, மைலேடிஸ் பூங்கா போன்று, 22 பூங்காக்களில் யோகா மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காக்களில், பொங்கல் பண்டிகை முடிந்த பின், பகுதி நேர யோகா பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இலவசமாக யோகா பயிற்சி அளிக்கப்படும்' என்றார்.மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகள், கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.