Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாலை சீரமைப்பு பணி முதன்மை செயலாளர் நள்ளிரவில் நேரில் ஆய்வு

Print PDF

தினகரன்       07.01.2011

சாலை சீரமைப்பு பணி முதன்மை செயலாளர் நள்ளிரவில் நேரில் ஆய்வு

சென்னை, ஜன.7:

சிறப்பு சாலை திட்டத்தின்படி, மழையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அரசு ரூ. 60 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் 146 கி.மீ. நீளமுள்ள சாலைகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் ரூ. 20 கோடியில் 100 கி.மீ. நீள உட்புறச்சாலைகளுக்கான பணிகளும் நடக்கிறது.

இந்த பணிகளை தமிழக அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச்செயலாளர் அசோக் வர்தன் ஷெட்டி, நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணி முதல் அதிகாலை 1 மணி வரை நேரில் ஆய்வு செய்தார்.

எருக்கஞ்சேரி எத்திராஜ் சாமி சாலை, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை உள்ளிட்ட சாலை பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

மேலும் ருக்மணி லட்சுமிபதி சாலை பணியையும், டாக்டர் முத்துலட்சுமி சாலையில் சாலை அகழ்ந்தெடுத்து புதுப்பிக்கும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார்.

மாநகராட்சி ஆணையர் முனைவர் கார்த்திகேயன், துணை ஆணையர் (பணிகள்) டாக்டர் தரேஸ் அகமது, தலைமைப்பொறியாளர் முருகேசன், மேற்பார்வைப் பொறியாளர் ராமமூ£ர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.