Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிப்., 1 முதல் திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் மூடல்? சிமென்ட் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு

Print PDF
தினமலர்          25.01.2011

பிப்., 1 முதல் திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் மூடல்? சிமென்ட் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு

திருப்பூர்: திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில், மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்றடுக்கு சிமென்ட் சாலை அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு, நிதி ஒதுக்கீடு செய்து, வரும் 27ல் நடைபெறும் மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இப்பணியை மேற்கொள்ள, வரும் பிப்., 1 முதல் பழைய பஸ் ஸ்டாண்ட் மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பூரில் மக்கள் தொகையும், வாகன எண்ணிக்கையும் குறைவாக இருந்தபோது, காமராஜ் ரோட்டில் பஸ் ஸ்டாண்ட் உருவாக்கப்பட்டது. அதாவது, 30 ஆண்டுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது. தாராபுரம் ரோடு வழியாக, மதுரை, தேனி, திண்டுக்கல், கம்பம், தூத்துக்குடி, நாகர்கோவில், திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங் களில் இருந்து வரும் பஸ்கள், கோவை, ஈரோடு, நீலகிரி, சத்தியமங்கலம், மைசூரு உள்ளிட்ட வட மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள் என 1,500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து சென்றன. அபரிமிதமான பனியன் தொழில் வளர்ச்சி யால், வெளிமாவட்டம், வெளிமாநிலங் களில் இருந்து ஏராளமானோர் வந்து, வாடகை வீடுகளில் குடியேறி வருகின்றனர். நகரை விட்டு மூன்று அல்லது நான்கு கி.மீ., தொலை வில் இருப்பவர்கள் வேலை நிமித்தமாக அல்லது வெளியூர் செல்ல வேண்டுமெனில், பழைய பஸ் ஸ்டாண்டையே நாட வேண்டியுள்ளது. போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த 2001ல் பெருமாநல்லூர் ரோட்டில் புது பஸ் ஸ்டாண்ட் கட்டப் பட்டது. நகர பகுதியை விட்டு, ஐந்து கி.மீ., தள்ளி கட்டப்பட்டுள்ளதால், பஸ்கள் அங்கு செல்லாமல், பழைய பஸ் ஸ்டாண்டையே தொடர்ந்து பயன்படுத்தின. இதனால், புது பஸ் ஸ்டாண்ட் வெறிச்சோடியது. போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க, புது பஸ் ஸ்டாண்டை பயன்படுத்த வேண்டுமென பல் வேறு அமைப்பினரும் தொடர்ந்து வலியுறுத் தினர். கடந்த 2006 முதல் இயங்கத் துவங் கியது. அங்கிருந்து, திருச்சி, தஞ்சாவூர், காரைக் கால், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட தொலைதூர பஸ்கள் இயக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது. அதன்படி, பஸ்கள் சென்று வருகின்றன. தற்போது, பழைய பஸ் ஸ்டாண்டுக்குள் போடப்பட்டுள்ள சாலைகள் பழுதடைந்து, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. குண்டும், குழியுமாக காணப்படு கிறது. பஸ்களும் ஒழுங்கற்று நிற்கின்றன. இதைத்தொடர்ந்து, உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கென, மூன்று கோடியே ஆறு லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது. இப் பணி மேற்கொள்வதற்கான தீர்மானம், வரும் 27ல் நடைபெற உள்ள கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளது. வளர்ச்சி பணி துவங்கும் பட்சத்தில், இடையூறு ஏற்படாமல் இருக்க பழைய பஸ் ஸ்டாண்டை தற்காலிகமாக மூட, மாநக ராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அத் தகைய சூழல் ஏற்படும்போது, போக்குவரத்தை எவ்வாறு மாற்றி அமைப்பது, வாகன நெரிசலை தவிர்ப்பது எவ்வாறு? பொது மக்கள் அவதி ஏற்படுமா? பழைய பஸ் ஸ்டாண்டுக் குள் கடை அமைத்துள்ள வியாபாரிகள் நிலை குறித்து, காவல் துறை, போக்குவரத்து துறை, கடை அமைத்துள்ள வணிகர்கள் சங்கங் களுடன் மாநகராட்சி நிர்வாகம் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. இக்கூட்டம், விரைவில் நடைபெற உள்ளது. மாநகராட்சி உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,"வரும் பிப்., 1 முதல் பழைய பஸ் ஸ்டாண்ட் மூடப்படும். மூன்று கோடியே ஆறு லட்சம் ரூபாய் மதிப்பில், ஒன்பது மாதங்கள் பணி நடக்கும். ஏற்கனவே உள்ள சாலையை பெயர்த்து எடுத்து விட்டு, புதிதாக மூன்றடுக்குடன் சிமென்ட் சாலை அமைக்கப்படும்,' என்றார்.