Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சியில் குடியரசு தினவிழா மேயர் தேசியகொடி ஏற்றினார்

Print PDF

தினகரன்        27.01.2011

மாநகராட்சியில் குடியரசு தினவிழா மேயர் தேசியகொடி ஏற்றினார்

திருச்சி, ஜன.27:

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் மேயர் சுஜாதா தேசியக்கொடியேற்றி, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று காலை குடியரசு தினவிழா நடந்தது. கமிஷனர் பால்சாமி, துணைமேயர் அன்பழகன் முன்னிலை வகித்தனர். மேயர் சுஜாதா தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில், 25 ஆண்டுகள் மாசற்ற முறையில் பணியாற்றிய 5 பேருக்கு பாராட்டு சான்றிதழ், ரூ.500க்கான கிஷான் விகாஸ் பத்திரம் வழங்கப்பட்டது.

அதேபோல், விபத்தில்லாமல் 20 ஆண்டுகள் வாகனம் ஓட்டிய 2 டிரைவர்களை பாராட்டி சான்றிதழும், தங்க நாணயமும் வழங்கப்பட்டது.

பின்னர் அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள காந்தி அஸ்திக்கு மேயர் சுஜாதா, கமிஷனர் பால்சாமி, துணைமேயர் அன்பழகன் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, காந்தி சந்தையிலுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த பின் அங்கு மேயர் சுஜாதா தேசியக்கொடி ஏற்றினார். இவ்விழாவில் மண்டல குழு தலைவர்கள், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நகர பொறியாளர் ராஜாமுகமது வரவேற்றார். மக்கள் தொடர்பு அலுவலர் முத்துச்சாமி நன்றி கூறினார்.