Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தீர்மானம் நிறைவேற்றம் : ஆவடி நகராட்சி கட்டிடத்துக்கு காமராஜர் பெயர் சூட்ட முடிவு

Print PDF

தினகரன்      02.02.2011

தீர்மானம் நிறைவேற்றம் : ஆவடி நகராட்சி கட்டிடத்துக்கு காமராஜர் பெயர் சூட்ட முடிவு

ஆவடி, பிப். 2:

ஆவடி நகராட்சி உறுப்பினர்கள் கூட்டம், தலைவர் விக்டரி மோகன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் அப்துல்ரகீம், கமிஷனர் ராமமூர்த்தி, பொறியாளர் குருசாமி, நகரமைப்பு அதிகாரி சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், நகராட்சி தெரு விளக்குகளை பராமரிக்க ரூ.12 லட்சத்தில் லேடர் வாகனம் வாங்குவது, நாகம்மை நகர் சத்துணவு கூடத்தை ரூ.3 லட்சத்தில் புதுப்பிப்பது, ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பாதாள சாக்கடையின் பழைய மூடிகளை அகற்றி, புதிய மூடிகள் அமைக்க ரூ.2 லட்சம் ஒதுக்குவது. நகராட்சி புதிய கட்டிடத்துக்கு காமராஜர் பெயர் சூட்ட நடவடிக்கை எடுப்பது. நகராட்சி வளாகத்தில் அண்ணா சிலை வைப்பது என்றும், திருமுல்லைவாயல் அம்பேத்கர் பிரதான சாலையை . 1.4 லட்சத்தில் சீரமைப்பது, சோழம்பேடு வரி செலுத்தும் கம்ப்யூட்டர் மையத்தை ரூ. 12.5 லட்சத்தில் சீரமைத்தல், திருமுல்லைவாயல் சுடுகாடு முட்புதர் அகற்றம், சரஸ்வதி நகர் பிரதான சாலை, சேக்காடு உர கிடங்கு சீரமைக்க ரூ. 1.5 லட்சம் ஒதுக்குவது, நகராட்சி பகுதிகளில் லாரிகளில் குடிநீர் சப்ளை செய்ய ரூ. 1.2 கோடி செலவிடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.