Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஹைவேவிஸ் பேரூராட்சியில் அரசு விருந்தினர் மாளிகை கட்டும் பணி

Print PDF

தினமணி 03.09.2009

ஹைவேவிஸ் பேரூராட்சியில் அரசு விருந்தினர் மாளிகை கட்டும் பணி

தேனி, செப். 2: தேனி மாவட்டம் ஹைவேவிஸ் பேரூராட்சியில் ரூ. 15.5 லட்சம் செலவில் அரசு விருந்தினர் மாளிகை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பேரூராட்சியில் மேகமலை, மணலாறு, இரவங்கலாறு, மகாராஜாமெட்டு மற்றும் பல மலைக் கிராமங்கள் உள்ளன இப்பகுதிகளில் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

ஹைவேவிஸ் மலைக் கிராமங்களைச் சுற்றியுள்ள 5 அணைகள் மற்றும் பசுமையான தேயிலைத் தோட்டங்கள், மேகக் கூட்டங்கள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகின்றன.

இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஆய்வுக்குச் செல்லும் அலுவலர்கள் தங்குவதற்கு எவ்வித அடிப்படை வசதிகளும் கிடையாது.

இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் அரசு விருந்தினர் மாளிகை கட்டுவதற்கு, ரூ. 15.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது.