Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோபி நகராட்சிப் பள்ளியில் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை: நகர்மன்றத் தலைவர்

Print PDF
தினமணி                30.07.2012

கோபி நகராட்சிப் பள்ளியில் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை: நகர்மன்றத் தலைவர்


கோபி, ஜூலை 29: கோபி நகராட்சி ஆண்கள் பள்ளியில் சுத்தமான குடிநீர் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர்மன்றத் தலைவர் ரேவதிதேவி தெரிவித்தார்.

÷கோபிசெட்டிபாளையம் நகர்மன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகர்மன்றத் தலைவர் ரேவதிதேவி தலைமை வகித்தார். ஆணையாளர் பா.ஜான்சன், நிர்வாக பொறியாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

÷கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் பேசியது:

கோபி நகராட்சிக்கு உள்பட்ட 24, 26, 28, 29, 30 ஆகிய 5 வார்டுகளுக்கு உள்பட்ட பகுதிகளில் தேங்கும் குப்பையைச் சேகரிப்பதற்காக ஒப்பந்த அடிப்படையில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் 30 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

÷தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகளில் தொலைநோக்கியின் மூலம் வீடுகள் அளவெடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன் முன்னோடியாக கோபிசெட்டிபாளையம், ராஜபாளையம் ஆகிய 2 நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, தற்போது தொலைநோக்கியின் மூலமாக அளவீடு செய்யப்படுகிறது. மற்றபடி வரிகள் எதுவும் உயர்த்தப்படாது.

÷கோபி நகராட்சி பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் 3 நாட்களுக்கு ஒருமுறைதான் திறக்கப்படுகின்றன. இதனால், ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர் என்று நகர்மன்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.

 இது குறித்து சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
 
÷தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சுத்தமான குடிநீர் வழங்குவதற்காக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார்.
 
இதற்காக அரசின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால், கோபி நகராட்சி ஆண்கள் பள்ளியில் சுத்தமான குடிநீர் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

÷கூட்டத்தில், விவாதத்திற்கு வைக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. துணைத்தலைவர் செல்வராஜ், சுகாதார அதிகாரி சக்திவேல் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.