Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி புதிய அலுவலகம் எதிரே பூங்கா அமைக்க முடிவு:ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம்

Print PDF
தினமணி                   03.08.2012

நகராட்சி புதிய அலுவலகம் எதிரே பூங்கா அமைக்க முடிவு:ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம்


பெரம்பலூர், ஆக. 2: பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டுள்ள நகராட்சி புதிய அலுவலகம் எதிரே பூங்கா அமைக்கப்படும் என்றார் நகர்மன்றத் தலைவர் சி.ரமேஷ்.பெரம்பலூர் நகராட்சியின் அவசரக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அவர் மேலும் பேசியது:

நகராட்சிக்குள்பட்ட 11-வது வார்டில் டாக்டர் குணகோமதி தெருவில் ரூ. 1 லட்சம் மதிப்பில் சிறு பாலமும், மழைநீர் கால்வாயும் அமைக்கப்பட உள்ளது. 20- வது வார்டில் உள்ள நூலகத்தில் ரூ. 70 ஆயிரம் மதிப்பில் மின்வசதி மற்றும் டைல்ஸ் ஒட்டப்பட உள்ளது. 9 -வது வார்டில் உள்ள ஒüவையார் தெருவில், ரூ. 2 லட்சம் மதிப்பில் சிறுபாலமும், மழைநீர் கால்வாயும், ரூ. 4 லட்சம் மதிப்பில் மூன்று சாலையில் உள்ள கிழக்கு பகுதியில் புதியதாக பைப்லைன் விஸ்தரிப்பு செய்து, சின்டெக்ஸ் டேங்க் அமைத்து மின் மோட்டார் பொருத்தப்பட உள்ளது. தீரன் நகரில் ரூ. 4 லட்சம் மதிப்பில் இரண்டு புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து, சின்டெக்ஸ் டேங்க் வைத்து மின் மோட்டார் பொருத்தப்பட உள்ளது. 15- வது வார்டில் ரூ. 2 லட்சம் செலவில் புதிய ஆழ்குழாய் அமைத்து மின் மோட்டார் பொருத்தி சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட உள்ளது.

நகராட்சி புதிய அலுவலக கட்டடத்தில் காலியாக உள்ள பகுதியில் சிறிய பூங்காவும், ரூ. 4 லட்சம் மதிப்பிட்டில் புதிய பேருந்து நிலையத்தின் உள் மற்றும் வெளிப்புறத்தில் உள்ள மின் விளக்குகளில், பழுதானவைகள் சீரமைக்கப்பட்டு, புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட உள்ளது. வார்டு 8, 10, 11 ஆகிய பகுதிகளில் ரூ. 8 லட்சம் மதிப்பில் புதிய போர்வெல் அமைத்து, மின் மோட்டார் பொருத்தி சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட உள்ளது. ரூ. 7.50 லட்சம் மதிப்பில் 5 புகை மருந்து தெளிக்கும் இயந்திரம் வாங்கப்பட உள்ளது என்றார் அவர்.

கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் தங்களது பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து எடுத்துக் கூறினர்.இதில், நகர்மன்ற துணைத்தலைவர் ஆர்.டி. ராமச்சந்திரன், ஆணையர் பி. குருசாமி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.