Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு கலெக்டர் வேண்டுகோள்

Print PDF

தினகரன்             03.08.2012

பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு கலெக்டர் வேண்டுகோள்

ஈரோடு, : ஈரோடு மாவட்ட கலெக்டர் சண்முகம் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது: பிறப்பு, இறப்பு பதிவுச்சட்டம் 1969ன்படி பிரிவு 12ல் பிறப்பு,

இறப்பு பதிவு செய்தவுடன் கட்டணம் ஏதுமின்றி பிறப்பு, இறப்பு சான்றிதழ் ஒரு பிரதி மடடும் இலவசமாக வழங்கப்படும். பொதுமக்கள் பிறப்பு சான்றில்குழந்தைகளின் பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஏதேனும் ஒரு குழந்தையின் பிறப்பானது பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் குழந்தையின்பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 12 மாதங்களுக்குள் தங்கள் பகுதியில் உள்ள பிறப்பு இறப்பு பதிவாளருக்கு வாய்மொழியாகவோ, எழுத்துமூலமாகவோ குழந்தையின் பெயரை பதிவு செய்து சான்று பெறலாம்.

ஓராண்டிற்கு பிறகு கால தாமத கட்டணமாக 5 ரூபாய் செலுத்தி 15ஆண்டுகளுக்குள் பெயர் பதிவு செய்யலாம். நகராட்சி பகுதிகளில் ஆணையாளரிடமும், பேரூராட்சி பகுதிகளில் செயல் அலுவலரிடமும், பஞ்சாயத்துபகுதிகளில் கிராம நிர்வாக அலுவலரிடமும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதார ஆய்வாளரிடமும் பெயர் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த 15 ஆண்டு என்பது தமிழ்நாடு பிறப்பு, இறப்பு விதிகள் 2000 தொடக்க தேதிக்கு முன்னர் அதாவது 1.1.2000ம் தேதிக்கு முன்னர் நிகழ்ந்த பதிவுசெய்யாத பிறப்புகளுக்கு 1.1.2000ம் ஆண்டில் இருந்து 15 ஆண்டுகளுக்குள் பெயர் பதிவு செய்ய விதிகளில வழி வகுக்கப்பட்டுள்ளது.

31.12.2014ம்ஆண்டு வரை மட்டுமே 2000ம் ஆண்டிற்கு முன்னர் பதிவு செய்த பிறப்புகளுக்கு பெயர் பதிவு செய்யப்படும். 31.12.2014க்கு இன்னும் இரண்டரைஆண்டுகளே உள்ள நிலையில் பொதுமக்கள் பிறப்பு சான்றில் பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் 1.1.2000ம் ஆண்டிற்கு பிறகு பதிவுசெய்த பிறப்புகளுக்கு பதிவு செய்த தேதியில் இருந்து 15 ஆண்டுகள் வரை மட்டுமே பெயர் பதிவு செய்ய முடியும். எனவே பிறப்பு சான்றிதழில் பெயர்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பிறப்பு, இறப்பு பதிவு செய்வதிலோ, சான்று பெறுவதிலோ ஏதேனும் இடையூறுகள் இருந்தால் மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலு வலர்,சுகாதாரபணிகள் துண இயக்குர் ஆகியோரை பொதுமக்கள் சந்தித்து தங்கள் குறைகளை தெரிவிக்க கேட்டுக் கொண்டுள்ளார்.