Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி ஆடு வதைக் கூடம் கட்டுவதில் குளறுபடி?

Print PDF

தினமணி 07.09.2009

மாநகராட்சி ஆடு வதைக் கூடம் கட்டுவதில் குளறுபடி?

திருப்பூர், செப்.6: திருப்பூர் மாநகராட்சி சார்பில் தென்னம்பாளை யம் சந்தைப்பேட்டையில் கட்டப்படும் ஆடுவதைக் கூடம் கட்டுமான பணியில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்வதாக புகார் எழுந்துள்ளன. இதனால் எதிர்காலத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாமிச க்கடைகளில் ஆடுகளை சாலையோரங்களிலேயே வைத்து வெட்டுவதால் ஏற்படும் சுகாதாரப் பாதி ப்பை அடுத்து மாநகராட்சி சார்பில் ஆடு வதைக் கூடம் அமைக்க வேண்டும் என்று பல்வேறுதரப்பு மக்களிடம் இருந்து கோரிக்கைகள் எழுப்பப் பட்டன. அதைத்தொடர்ந்து, அரசு நிதி, மாநகராட்சி பொதுநிதி என ரூ.51 லட்சம் மதிப்பில் திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைப்பேட்டையில் ஆடு வதைக்கூடம் கட்ட டெண்டர் விடப்பட்டு கடந்த 2008 செப்.15-ல் பணி துவக்கப்பட்டது.

ஆடு வதைக்கூடம், கழிவறை உள்ளிட்ட அறைகள் கட்டுமானம் முடிந்துள்ள நிலையில் தற்போது வளாக சுற்றுச்சுவர் அமைக்கும் பணிதுரிதமாக நடந்து வருகிறது. இந்நிலையில், அச்சுற்றுச்சுவர் அமைப்பதில் பல்வேறு குளறுபடிகள் செய்யப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 7 அடி உயரத்தில், ஆயிரம் அடி நீளத்து க்கு கட்டப்படும் இந்த சுற்றுச்சுவரில் 80 பில்லர்கள் அமைக்கப்படுகின்றன. இதன் அஸ்தி வாரத்தில் இரும்பு கம்பிகள் கொண்ட வலை (படல்) அமைத்து அதன் மீது பில்லர் அமைக்கும் போதே நீண்ட வருடத்துக்கு சுவர் வலிமையாக நிற்கும்.ஆனால், குளறுபடியாக கம்பி படல் அமைக்காமலும், கண்துடைப்புக்காக ஒருசில பில்லர்களுக்கு மட்டும் வலை அமைத்தும் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதில், 15 கிலோ கொண்ட ஒரு கம்பிபடல் அமை க்க சுமார் ரூ.525 செலவாகிறது. அதன்படி 80 பில்லர்களுக்கும் சுமார் ரூ.42 ஆயிரம் ஏமாற்றப் படுவதாகவும் அப்பகுதி கட்டுமான தொழில் தெரி ந்தவர்கள் தெரிவித்தனர். இதனால், குறுகிய காலத்தில் சுவர்கள் வலுவிழந்து எதிர்காலத்தில் பெரும் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் செயற்பொறியாளர் கண்ணனிடம் கேட்ட போது, தேவையான கம்பி படல்கள் அமைத்தே சுற்று சுவர்கள் கட்டப்படுகிறது. மேற்கொண்டு கட்டடங்கள் கட்டப்படுவதில்லை என்பதால் அந்த சுவருக்கு இந்த அமைப்பே போதுமானது என்றனர்.

ஆனால், இந்த சுற்றுச்சுவர் கட்டும் பணியில் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதால் இப்போதே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தி எதிர்கால பிரச்னைகளை தவிர்க்க வேண்டும். அவ்வாறு ஆய்வுப்பணிகள் நடத்தும் போது ஆடு வதைக்கூட கட்டடத்தின் கட்டுமானத் தையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக் கைகள் எழுப்பப்பட்டுள்ளன.

"சந்தைப்பேட்டை ஆடுவதைக்கூடம் கட்டுமான பணி செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. மேலும் அப்பணி களை மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினு ம் பொதுமக்கள் தெரிவித்துள்ள இப்பிரச்னையின் மீது உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தீர்வு ஏற்படுத்தப்படும்' என்றார் மாநகராட்சி ஆணை யர் ஆர்.ஜெயலட்சுமி.