Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"மக்களை நோக்கி நகராட்சி' திட்டம்: மூலம் குறைகளுக்கு உடனடி தீர்வு

Print PDF

தினமலர்             20.08.2012

"மக்களை நோக்கி நகராட்சி' திட்டம்: மூலம் குறைகளுக்கு உடனடி தீர்வு

திருச்செங்கோடு: ""மக்களை நோக்கி நகராட்சி திட்டத்தின் மூலம் நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் குறைகள் அனைத்தும் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும்,'' என, தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கமணி பேசினார்.திருச்செங்கோடு பகுதி பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டு நிவாரணம் வழங்கும் வகையில், மக்களை நோக்கி நகராட்சி நிர்வாகம் என்ற திட்டம் துவக்க விழா, பக்தவச்சலம் நகர் விஷ்ணு வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடந்தது.நகராட்சி சேர்மன் சரஸ்வதி தலைமை வகித்தார். கமிஷனர் (பொறுப்பு) ராஜேந்திரன் வரவேற்றார். தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கமணி, திட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க, நாமக்கல் மாவட்டத்தில், மக்களை நோக்கி நகராட்சி நிர்வாகம் என்ற சீரிய திட்டம் இங்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நாமக்கல் நகராட்சியில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு நகராட்சியில், 22வது வார்டுகளில் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.படிப்படியாக இத்திட்டம் நகராட்சி முழுவதும் உள்ள, 33 வார்டுகளிலும் விரிவுப்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் நகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டு நிவாரணம் வழங்கப்படுகிறது.பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களில், நகராட்சி சம்பந்தப்பட்ட பிரச்னைகளின் மீது மனுக்கள் பெறுவதோடு, சொத்துவரி, வரி விதிப்பு, சொத்துவரி பெயர் மாற்றம், பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குதல், புதிய குடிநீர் இணைப்பு வழங்குதல், குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம் செய்தல், கட்டிட அனுமதி வழங்குதல், ஈமச்சடங்கு மானிய உதவி வழங்குதல் உள்ளிட்ட மனுக்களின் மீது நகராட்சி அலுவலர்களால் அந்த இடத்திலேயே ஆய்வு செய்யப்பட்டு உடனுக்குடன் உத்தரவு வழங்கப்படும்.இத்திட்டத்தின் மூலம் நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் குறைகள் அனைத்தையும் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும். நகராட்சி நிர்வாகத்தினர் குறைகளை கேட்டு தங்களது வார்டு பகுதிகளுக்கு வரும்போது, பொதுமக்கள் பிரச்னைகளை தெளிவாக எடுத்துக்கூறி நிவாணம் பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு அவர் பேசினார்.நகராட்சி கவுன்சிலர்கள் பெரியசாமி, முருகேசன், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Monday, 20 August 2012 07:21