Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தஞ்சை கலெக்டர், நகராட்சி தலைவர்தலைமையில் நல்லிணக்க உறுதியேற்பு

Print PDF

தினமலர்                       21.08.2012

தஞ்சை கலெக்டர், நகராட்சி தலைவர்தலைமையில் நல்லிணக்க உறுதியேற்பு

தஞ்சாவூர்: தஞ்சை கலெக்டர் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலக வளாகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழியை அதிகாரிகள், அலுவலர்கள் எடுத்தனர்.மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் பிறந்தநாளான ஆகஸ்ட் 20ம் தேதி நல்லிணக்க நாளாக அனுசரித்து, உறுதிமொழி ஏற்க அரசு உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் பாஸ்கரன் தலைமையில், நல்லிணக்க நாள் உறுதிமொழியை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.இதையொட்டி ராஜீவ் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இதில் டி.ஆர்.ஓ., சுரேஷ்குமார், கலெக்டர் உதவியாளர் முத்துக்குமாரசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் மதிவாணன், மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் பரமசிவம், தாசில்தார் முருகதாஸ் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.இதேபோல் தஞ்சை நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் நகராட்சி தலைவர் சாவித்திரி தலைமை வகித்து, நல்லிணக்க உறுதிமொழியை வாசிக்க, கவுன்சிலர்கள், அலுவலர்கள் நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.நகராட்சி கமிஷனர் ஜானகி, கவுன்சிலர்கள் சரவணன், சிவக்குமார், பாலசுப்பிரமணியன், காயத்ரி, அமுதா உள்பட பலர் பங்கேற்றனர்.