Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

முதன்மை மாவட்ட நீதிபதி தகவல் மாநகராட்சி-ஊராட்சி வரை விரைவில் சட்ட உதவி மையம்

Print PDF

தினகரன்             28.08.2012

முதன்மை மாவட்ட நீதிபதி தகவல் மாநகராட்சி-ஊராட்சி வரை விரைவில் சட்ட உதவி மையம்

திருச்சி, : தமிழகத்தில் மாநகராட்சி முதல் ஊராட்சி வரை விரைவில் சட்ட உதவி மையம் தொடங்கப்பட உள்ளதாக முதன¢மை மாவட்ட நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார்.

திருச்சி கலெக்டர் ஆபீ சில் மாவட்ட சட்டப்பணி கள் ஆணைக்குழுவின் இல வச சட்ட உதவி மையம் தொடக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தார். முதன்மை மாவட்ட நீதிபதி யும், மாவட்ட சட்டப்பணி கள் ஆணைக்குழுவின் தலைவருமான வேல்முரு கன் சட்ட உதவி மையத்தை தொடங்கி வைத்தார். பின் னர் நீதிபதி வேல்முருகன் கூறியது:

தமிழகத்தில் முதன் முறையாக திருச்சி கலெக் டர் ஆபீசில் தான் இலவச சட்ட உதவி மையம் தொடங்கப்படுகிறது. இந்த மையம் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். இங்கு ஒரு வக் கீலும், ஒரு சட்ட தன் னா ர்வ தொண்டரும் இருந்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.

சட்டம் அல்லாத துறை மனுக்களாக இருந்தால் சம்பந்தப்பட்ட துறைக்கு அழைத்து செல்லப்படுவர். மாநகராட்சி, கமிஷனர் ஆபீஸ், தாலுகா ஆபீஸ், பல்கலைக்கழகம், மற்றும் அனைத்து பஞ்சாயத்து அலுவலகங்களில் விரை வில் சட்ட உதவி மையம் திறக்க முடிவு செய்துள் ளோம். எங்களுக்கு ஒரு அறை மட்டும் போதும். உச்சநீதிமன்ற உத்தரவின் படி அரசு அலுவலகங்க ளில் இலவச சட்ட உதவி மையங்கள் திறக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

மையத்தில் முதன்முதலாக அரியமங்கலம் காட் டூரை சேர்ந்த செல்வி(50) அளித்த மனு:

எனது கணவர் ஆறுமு கம். டிரைவர். எங்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 12 ஆண்டுகளுக்கு முன்பு கண வர் எங்களை பிரிந்து வேறு பெண்ணுடன் மதுரையில் வசிக்கிறார். எனது இரு மகள்களும் வளர்ந்து விட்டநிலையில் வீட்டு வேலை செய்து அவர்களை வளர்க்கிறேன். வசதியாக வாழும் எனது கணவர், எனக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என கூறியிருந்தார்.

விழாவில் மகிளா கோர்ட் நீதிபதி ரகுமான், முதன்மை சார்பு நீதிபதி திலகம், 2வது கூடுதல் சார்பு நீதிபதி ஜெயராஜ், ஊழல் தடுப்பு சிறப்பு நீதி மன்ற சிறப்பு நீதிபதி ஸ்ரீதர், முதன்மை மாவட்ட முன் சீப் பத்மநாபன், 2வது கூடு தல் மாவட்ட முன்சீப் வடி வேலு, ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுகள் இளங்கோவன் (முதலாவது), ராஜேந்திரன் (2வது), கிருபாகரன் மதுரம் (3வது), ராஜாராம் (4வது), நர்கீஸ் கரீம் (5வது) ஆகி யோர் பங்கேற்றனர்.

Last Updated on Tuesday, 28 August 2012 11:36