Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண பூ மார்க்கெட் வியாபாரிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை

Print PDF

தினகரன்           31.08.2012

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண பூ மார்க்கெட் வியாபாரிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை

கோவை, :  கோவை பூ வியாபாரம் செய்வதற்கு அமைக்கப்பட்ட புதிய மார்க்கெட்டுக்கு இடம் பெயரவேண்டும். போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கு அவர்களை அப்புறப்படுத்துவது என்று அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற மாநகராட்சி வளர்ச்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கோவை மாநகர மேம்பாடு மற்றும், மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண அனைத்து துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மேயர் வேலுச்சாமி தலைமையில் நடந்தது.

மாநகராட்சி கமிஷனர் பொன்னுசாமி, போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், துணை கமிஷனர்கள் செந்தில்குமார், ஹேமா கருணாகரன், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மண்டல மேலாளர் சுப்பிரமணியன், வட்டார போக்குவரத்து துறை சார்பில் ஆர்.டி.ஓ முனுசாமி, மின்வாரியம் சார்பில் சாந்தி, மாநகராட்சி தலைமை பொறியாளர் கருணாகரன், நகரமைப்பு அலுவலர் வரதராஜன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பது பற்றி இரண்டு மணி நேரம் விவாதிக்கப்பட்டது.

பின்னர், ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்:

* சத்திரோடு கணபதி பகுதியில் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

* மேட்டுப்பாளையம் ரோடு பூ மார்க்கெட் பகுதியில் நெரிசலை குறைக்க புதிதாக பூமார்க்கெட் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஆனாலும், இதை பயன்படுத்தாமல் பழைய மார்க்கெட் பகுதியிலேயே வியாபாரிகள் உள்ளனர். இவர்களை புதிய இடத்துக்கு அப்புறப்படுத்துவது. மீறினால் போலீஸ் துணையுடன் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவது.