Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகரை சுகாதாரமாக பராமரிக்க வாய்ப்பு செப்.,15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

Print PDF

தினமலர்          05.09.2012

மாநகரை சுகாதாரமாக பராமரிக்க வாய்ப்பு செப்.,15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி: திருச்சி மாநகராட்சியை சுகாதாரமாக பராமரிக்க தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் பங்கேற்க மாநகராட்சி கமிஷனர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளையும் பாரபட்சமில்லாமல் சுகாதாரமாகவும், தூய்மையாகவும் பராமரிக்க வேண்டியது மாநகராட்சியின் கடமை.மாநகர மக்கள் நலன் கருதி மாநகராட்சி குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, தெரு விளக்கு பராமரிப்பு, சாலை வசதி, மழைநீர் வடிகால், புதை வடிகால் போன்ற அடிப்படை வசதிகளை உருவாக்குதல் மற்றும் பராமரிப்பு ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற பணிகளில் மக்கள் பங்கேற்புடன் செய்வது சிறப்பான முன்னேற்றத்தை அளிக்கும்.வரலாற்று சிறப்புமிக்க இம்மாநகரத்தை சிறப்பாக பராமரித்திட தன்னார்வம் உள்ள குடியிருப்போர் நலச்சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், நன்கொடையாளர்கள் பங்கேற்புடன் செயலாற்றுவதற்கு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

எனவே, இம்மாநகர எல்லைக்குள் உள்ள 65 வார்டுகளில் இயங்கி வரும் பதிவுபெற்ற மற்றும் பதிவுபெறாத குடியிருப்போர் நலச்சங்கங்கள், ஆண்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், பதிவுபெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் போன்ற அமைப்புகள், மாநகராட்சி மூலம் பொதுமக்கள் பங்கேற்புடன் செயல்படுத்த உத்தேசித்துள்ள பல்வேறு மக்கள் நலன் கருதும் திட்டங்களுக்கு சிறந்த முறையில் தங்களை இணைத்துக் கொண்டு பங்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.இதுபோல பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களது பெயர்களை செப்டம்பர் 15ம் தேதிக்குள், அந்தந்த பகுதிக்கான கோட்ட அலுவலகங்களில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குதல், திடக்கழிவுகளை ஆரம்ப நிலையில் பிரித்து ஒப்படைத்தல், உள்ளூரில் இயங்கி வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் சுய உதவிக்குழுக்களை மக்களின் பல்வேறு சேவை பணிகளுக்கு பயன்படுத்துதல், கால்நடைகளை கட்டுப்படுத்துதல், நகர்புற காடுகள் வளர்ப்பு, பூங்காக்கள் உருவாக்குதல், சமூக காவல் பணி, வார்டுகளை அழகுபடுத்தும் பணிகள் போன்ற பல்வேறு பணிகளில் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைத்து செயல்பட நலச்சங்கங்களின் பங்கேற்பும், வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது.