Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தில்லி மாநகராட்சிகள் சார்பில் 98 பேருக்கு நல்லாசிரியர் விருது

Print PDF
தினமணி                    06.09.2012

தில்லி மாநகராட்சிகள் சார்பில் 98 பேருக்கு நல்லாசிரியர் விருது

புது தில்லி, செப். 5: தில்லியில் மூன்று மாநகராட்சிகள் சார்பில் ஆசிரியர் தின விழா புதன்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பள்ளிகள் அலங்கரிக்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளைக் கூறி மாணவர்கள் ஆசி பெற்றனர்.

வடக்கு தில்லி மாநகராட்சி: டாக்டர் ஷ்யாம பிரசாத் முகர்ஜி-சிவிக் சென்டரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு தில்லி மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் 40 பேருக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை வடக்கு தில்லி மேயர் மீரா அகர்வால் வழங்கினார். விருதில் பாராட்டுப் பத்திரமும், ரூ. 7,000 ரொக்கமும் அடங்கும்.

விருது பெற்றோர் விவரம்:

ஆர்.டி. சர்மா (தலைமை ஆசிரியர்-ரித்தாலா), சுதா சர்மா (தலைமை ஆசிரியை-ரோகிணி, 15வது செக்டர்), சாஹினா நிகர் (தலைமை ஆசிரியை-முஃப்தி வாலா), பல்ராஜ் பரத்வாஜ் (தலைமை ஆசிரியர்-ஈஸ்வர் காலனி), பிரேம் சந்த் குப்தா (தலைமை ஆசிரியர்-சந்த் நகர்), வீரேந்தர் சிங் (தலைமை ஆசிரியர்-பெஹலாத்பூர்), தேவி லேகா (தலைமை ஆசிரியை-மங்கோல்பூர் கலன்), அஞ்சு பாட்டியா (தலைமை ஆசிரியை-மோதி நகர்), சந்தேர் கலி (தலைமை ஆசிரியர்-7வது  செக்டர், ரோகிணி).

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்: கிஷன் தாஹியா (பங்கேர்), ரேணு (பானா உத்யான்), முக்தா தாஹியா (பீதம்புரா), ஜோஸ்தானா குப்தா (ராம் நகர்), சுஷ்மா வர்மா (ஈத்கா ரோடு), ரஜ்னி சர்மா (ஷாலிமார் பாக்), மகாவீர் பிரசாத் ( ரோஹினி), நர்வதா சோனி (ஜாவ்லாபுரி), ரஞ்சனா (முல்தானி தண்டா), சுரேந்தர் சிங் (சராய் பீபல் தலா), தர்ஷணா குமாரி (ஸ்வரூப் நகர்), நீரு மாலிக் ( பீதம்புரா), கமலேஷ் (ரோகிணி, 7வது செக்டர்), சுமித் சானி (பூசா கேம்பஸ்), சுதா சர்மா (கிழக்கு மோதி நகர்), வீணா பஜாஜ் (விஜய் நகர்), கமலேஷ் (ராமேஷ்வர் நகர்), சஷி (16வது செக்டர், ரோகிணி), சுனிதா ராணி (நாராயணா), உரூசா (முஃதி வாலா), விஜய் பால் சிங் (இந்தர்புரி), நிர்மலா (5வது செக்டர் - ரோகிணி), சந்த் பீபி (கம்பா), இந்திராணி (நபி கரீம்), மது மகீஜா (மோகன் பார்க்), மஞ்சு (நியூ தேவ் நகர்), மது கெüசிக் (ஹைதர்பூர்), பாரத் பூஷன் லால் (ஷாலிமார் பாக்), சந்தோஷ் ராணா (சப்த் டெய்ரி), மோனிகா கல்ரா (முகர்ஜி பார்க்).

விருது பெற்றவர்களில் ஒன்பது தலைமை ஆசிரியர்களும், 28 பொதுப் பாட ஆசிரியர்களும், ஒரு சிறப்பு ஆசிரியரும், இரண்டு நர்சரி ஆசிரியர்களும் அடங்குவர்.

கிழக்கு தில்லி மாநகராட்சி:  உத்யோக் சதனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிழக்கு தில்லி மாநகராட்சி பள்ளிகளின் 25 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை  மேயர் அன்னபூர்ணா மிஸ்ரா விருதுகளை வழங்கினார். விருது பெற்றவர்களில் ஐந்து தலைமை ஆசிரியர்களும், 18 பொதுப் பாட ஆசிரியர்களும், ஒரு நர்சரி ஆசிரியரும், இசை ஆசிரியர் ஒருவரும் அடங்குவர்.

தெற்கு தில்லி மாநகராட்சி:

தெற்கு தில்லி மாநகராட்சி சார்பில் 33 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பீஷ்ம பிதாமக் மார்கில் ஸ்ரீ சத்யசாயி சர்வதேச மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெற்கு தில்லி மேயர் சவீதாகுப்தா விருதுகளை வழங்கினார்.

தெற்கு தில்லி மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளின் நான்கு தலைமையாசிரியர்கள், 26 தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், 2 நர்சரி பள்ளி ஆசிரியர்கள், ஒரு சிறப்புப் பயிற்சி ஆசிரியர் ஆகியோர் விருதுகளைப் பெற்றனர்.

விழாவில் துணை மேயர் வீர் சிங், நிலைக்குழுத் தலைவர் ராஜேஷ் கெலாட், அவைத் தலைவர் சுபாஷ் ஆர்யா, எதிர்க்கட்சித் தலைவர் ஃபர்ஹாத் சூரி, தெற்கு தில்லி மாநகராட்சி ஆணையர் மணீஷ் குப்தா ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக கல்விக் குழுத் தலைவர் சதீஷ் உபாத்யாய தலைமை வகித்தார். விழாவையொட்டி மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.