Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுரை மாநகரில் உள்ள சிலைகளை சுற்றி விளம்பரம் செய்தால் கடும் நடவடிக்கை

Print PDF

மாலை மலர் 09.09.2009

மதுரை மாநகரில் உள்ள சிலைகளை சுற்றி விளம்பரம் செய்தால் கடும் நடவடிக்கை; கமிஷனர் செபாஸ்டின் தகவல்

மதுரை, செப். 9-

மதுரை மாநகரினை அழகுப்படுத்துவது குறித்து கமிஷனர் செபாஸ்டின் தலைமையில் மாநகராட்சி கருத்தரங்கு கூடத்தில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கமிஷனர் பேசியதாவது:-

மதுரை நகரில் அரசு கட்டிடங்கள், மாநகராட்சியால் குறிப்பிட்டுள்ள முக்கிய வீதிகள் மற்றும் தெருக்களில் சுவரொட்டி விளம்பரங்கள் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்படுகிறது.

நகரின் அழகுக்காக அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்று இடங்களை சுற்றியும், முக்கிய தலைவர்களின் சிலைகள் அமைந்துள்ள இடங்களை சுற்றியும் அரசியல் கட்சியினர் மற்றும் தனியார்கள் சுவர் விளம்பரம் செய்தவற்கும் தடை செய்யப்பட்டு உள்ளயது.

இதனை மீறி அரசு கட்டிடங்கள் செயற்கை நீரூற்று இடங்கள், தலைவர்களின் சிலைகளை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் முக்கிய இடங்களில் சுவரொட்டிகள் மூலம் விளம்பரம் செய்பவர்கள் மீதும், சம்பபந்தப்பட்ட விளம்பர சுவரொட்டிகள் தயார் செய்த அச்சக நிறுவனம் மற்றும் விளம்பரங்களில் உள்ள நிறுவனங்கள் மீது அபராதமாக ரூ.5 ஆயிரம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுபவர்கள், புகைப்பிடிப்பவர்கள், போக்குவரத்துக்கு இடையூராக மாடுகளை சாலைகளில் விடுதல் போன்றவர்கள் மீது மாநகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் ரூ.1 லட்சம் வரை அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அந்தந்த இடங்களிலேயே சுகாதார ஆய்வாளர்கள் மூலமாக அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.