Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சிகளில் 5,300 காலிப் பணியிடங்கள்

Print PDF
தினமணி          25.03.2013

மாநகராட்சிகளில் 5,300 காலிப் பணியிடங்கள்


தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளிலும் 5,300 பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாநகராட்சிப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

வடக்கு தில்லி மாநகராட்சியில் 877 பணியிடங்களும், தெற்கு தில்லி மாநகராட்சியில் 2,828 பணியிடங்களும், கிழக்கு தில்லி மாநகராட்சியில் 1,690 பணியிடங்களும் நிரப்பப்படாமல்  உள்ளன.

வடக்கு தில்லி பாஜக கவுன்சிலர் விஜய் பிரகாஷ் பாண்டே கூறுகையில், "ஒருங்கிணைந்த தில்லி மாநகராட்சியிலும் காலிப் பணியிடங்கள் இருந்தன. அந்த விவகாரம் வெளியில் தெரியவில்லை.

ஊழியர்களின் பணிச்சுமை அதிகரிப்பு: ஆனால், தில்லி மாநகராட்சி மூன்றாகப் பிரிக்கப்பட்டவுடன், காலிப் பணியிடங்கள் விவகாரம் பெரிய அளவில் வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டது.

வடக்கு தில்லி மாநகராட்சியில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்து, அண்மையில் நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால், மாநகராட்சி பணிகள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது' என்றார்.

"மாநகராட்சியிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப, தில்லி சார்பு நிலை பணியாளர் தேர்வாணையம் (டிஎஸ்எஸ்பி) கடந்த சில ஆண்டுகளாகவே தேர்வு எதுவும் நடத்தவில்லை.  மாநகாரட்சிப் பணிகளில் "குரூப்-ஏ' பிரிவில் போதுமான பணியாளர்கள் இருக்கின்றனர். ஆனால், "குரூப்-பி,சி' பிரிவில் காலிப் பணியிடங்கள் அதிகமாக உள்ளன.

இதனால் மாநகராட்சிப் பணிகள் தாமதமடைகின்றன'' என்று கிழக்கு தில்லி மாநகராட்சி ஆணையர் எஸ்.எஸ். யாதவ் கூறினார்.

டிஎஸ்எஸ்பி தலைவருடன் ஆலோசனை: தெற்கு தில்லி மாநகராட்சி ஆணையர் மணீஷ் குப்தா கூறுகையில், "மாநகராட்சியில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக தில்லி சார்பு நிலை பணியாளர் தேர்வாணையத் தலைவருடன் விவாதித்து வருகிறோம்.

ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பவதில் டிஎஸ்எஸ்பி மும்முரமாக உள்ளது. அதையடுத்து மாநகராட்சியின் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கிறோம்' என்றார்.

வடக்கு தில்லி மாநகராட்சியில், கீழ் நிலை எழுத்தர் பணியில் 258 காலிப் பணியிடங்களும், உயர் நிலை எழுத்தர் பணியில் 122 காலிப் பணியிடங்களும் உள்ளன.

உதவி கணக்கர் பணியில் 53 காலிப் பணியிடங்களும்;

நிர்வாகத்துறை அதிகாரிகள் பிரிவில் 21 காலிப் பணியிடங்களும், பாதுகாவலர் பிரிவில் 125 காலிப் பணியிடங்களும் உள்ளன. எட்டு பேர் இருக்க வேண்டிய பொறியாளர் கண்காணிப்பாளர் பிரிவில் 5 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

கிழக்கு தில்லி மாநகராட்சியிலும் கீழ் நிலை எழுத்தர் பணியில் 158 காலிப் பணியிடங்களும், உயர் நிலை எழுத்தர் பணியில் 291 காலிப் பணியிடங்களும், உதவியாளர் பிரிவில் 458 காலிப் பணியிடங்களும், பாதுகாவலர் பிரிவில் 697 காலிப் பணியிடங்களும்  உள்ளன.

தெற்கு தில்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 4,482 பணியிடங்களில் 1,664 பணியிடங்களில் மட்டுமே ஊழியர்கள் உள்னனர்.

இதில் நிர்வாகத்துறை அதிகாரிகள் பிரிவில் 12 காலிப் பணியிடங்களும், கண்காணிப்புப் பிரிவில் 15 காலிப் பணியிடங்களும், தலைமை எழுத்தர் பிரிவில் 48 காலிப் பணியிடங்களும்;

கீழ் நிலை எழுத்தர் பணியில் 192 காலிப் பணியிடங்களும், உயர் நிலை எழுத்தர் பணியில் 398 காலிப் பணியிடங்களும், உதவியாளர் பிரிவில் 458 காலிப் பணியிடங்களும், பாதுகாவலர் பிரிவில் 697 காலிப் பணியிடங்களும் உள்ளன.

"கல்வித்துறை, மருத்துவத்துறை ஆகியவற்றில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் அக்கறை, மற்ற துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதில் காட்டப்படுவதில்லை.

ஒப்பந்த ஊழியர்கள்: மாநகராட்சிகளில் உள்ள காலிப் பணியிடங்களால் ஏற்படும் நெருக்கடியைச் சமாளிக்க  தாற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் அமர்த்தப்படுகின்றனர். இருந்தும் போதுமான ஊழியர்கள் இல்லாததால் பணிகள் பாதிக்கப்படுகின்றன' என்று வடக்கு தில்லி மாநகராட்சியின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.