Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"சிவகாசி நகராட்சியை தரம் உயர்த்தியது வரவேற்கத்தக்கது'

Print PDF
தினமணி        12.04.2013

"சிவகாசி நகராட்சியை தரம் உயர்த்தியது வரவேற்கத்தக்கது'

சிவகாசி நகராட்சி, சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக, முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என நகர்மன்றத் தலைவர் வெ.க. கதிரவன் கூறினார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: வருமானத்தின் படி, நகராட்சியை தரம் உயர்த்தலாம் என அரசு அறிவித்துள்ளது. நகராட்சியின் வருமானம் ஆண்டுக்கு 4 கோடிக்கு கீழ் இருந்தால் இரண்டாம்நிலை நகராட்சி எனவும், ரூ. 4 கோடி முதல் 6 கோடி வரை வருமானம் இருந்தால் முதல்நிலையாகவும், ரூ. 6 கோடிக்கு மேல் 10 கோடி வரை தேர்வுநிலையாகவும், ரூ. 10 கோடிக்கு மேல் சிறப்பு நிலையாகவும் நகராட்சியைத் தரம் உயர்த்தலாம் என அரசு உத்திரவிட்டுள்ளது.

2011-2012ஆம் ஆண்டு வரவு செலவு அறிக்கையில் சிவகாசி நகராட்சியின் ஆண்டு வருமானம் ரூ. 10 கோடிக்கு மேல் இருந்ததால், இந்த நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என 31.7.2012-ஆம் தேதி நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து தமிழக முதல்வர் சிவகாசி நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்துள்ளார்.

இதனை சிவகாசியில் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்றுள்ளனர் என நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.