Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தோப்பூரில் அமையும்துணைக்கோள் நகரத்தில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் மேயர் ராஜன் செல்லப்பா பேச்சு

Print PDF
தினத்தந்தி        14.04.2013

தோப்பூரில் அமையும்துணைக்கோள் நகரத்தில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் மேயர் ராஜன் செல்லப்பா பேச்சு


தோப்பூரில் அமையவுள்ள துணை நகரத்தில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட உள்ளது என்று மேயர் ராஜன் செல்லப்பா பேசினார்.

மிக்சி, கிரைண்டர் வழங்கும் விழா


திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூர் ஊராட்சியில் தமிழக அரசின் சார்பில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மதுரை மேயர் ராஜன்செல்லப்பா தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் பொன்னரசி வடிவேல், துணைத்தலைவர் ஜெயக்குமார் வரவேற்றனர். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தர்மராஜ், மாவட்ட கவுன்சிலர் டேவிட் அண்ணாத்துரை, யூனியன் தலைவர் நிர்மலாதேவி, துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், கவுன்சிலர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் 766 பேருக்கு விலையில்லா பொருட்களை வழங்கி மேயர் ராஜன் செல்லப்பா பேசியதாவது:– மதுரை மாவட்டத்தில் இதுவரை 73 ஆயிரம் பேருக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கப்பட்டுள்ளன. 70 ஆயிரம் மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.

தோப்பூரில் துணை நகரம்

தமிழகமும், தமிழக மக்களும் வளம் பெற வேண்டும் என்று தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அயராது பாடுபட்டு வருகிறார். தோப்பூரில் துணைக்கோள் நகரம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.இதுவரை நீங்கள் மதுரையை தேடி கிழக்கே சென்று கொண்டிருந்தீர்கள். இங்கு அமையவுள்ள துணைக்கோள் நகரத்தில் 2 ஆயிரம் வீடுகள், பள்ளி, விளையாட்டு மைதானம் வர்த்தக மையம் என்று அனைத்து வசதிகளும் செய்து தரப்பட உள்ளது. எனவே மதுரையில் இருந்து தோப்பூருக்கு மேற்கு நோக்கி மக்கள் வர தொடங்கி விடுவார்கள்.விரைவில் தேர்தல் வர உள்ளது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா கைநீட்டும் வேட்பாளரை வெற்றிபெறச்செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், இந்தியாவிற்கே வெளிச்சம் கிடைக்கும். ஜெயலலிதா இந்திய பிரதமாவார். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் தாசில்தார் கங்காதரன், முன்னாள் எம்.எல்.ஏ.சீனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.