Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மெனுவில் பொங்கல், எலுமிச்சைசாதம் சேர்ப்பு 10 மாநகராட்சியிலும் மலிவு விலை உணவகம் சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு

Print PDF

தமிழ் முரசு            15.05.2013

மெனுவில் பொங்கல், எலுமிச்சைசாதம் சேர்ப்பு 10 மாநகராட்சியிலும் மலிவு விலை உணவகம் சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை: தமிழக சட்டசபை இன்று காலை தொடங்கியதும் விதி 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா 5 அறிக்கைகள் வாசித்தார். அவற்றில் கூறியிருப்பதாவது: நான்கு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கும் வட்டங்களில், 62 வட்டங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றில் புரசைவாக்கம், கிண்டி, மதுரவாயல், திருச்சி கிழக்கு, மதுரை மேற்கு, அணைக்கட்டு, விக்ரவாண்டி உள்ளிட்ட 51 வட்டங்களை பிரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக 24 புதிய வருவாய் வட்டங்கள் உருவாக்கப்படும்.

மடத்துக்குளம், சோழிங்கநல்லூர், ஆம்பூர் உள்ளிட்ட வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டப்படும். கடலோர மாவட்டங்களில் கடலோர இன்னல் குறைப்பு திட்டம் ரூ.1481 கோடியில் உலக வங்கி நிதியுடன் இந்த நிதியாண்டு தொடங்கப்படும். இதன் மூலம் 121 கடலோர பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். கடலூர், நாகை நகர பகுதிகளில் பூமிக்கு அடியில் மின் இணைப்பு வழங்கப்படும்.10 மாநகராட்சிகளில்மலிவு விலை உணவகம்

சென்னையில் 200 இடங்களில் மலிவு விலை உணவகம் செயல்படுகின்றன. இதில் காலை 7 மணி முதல் 10 மணி வரை ரூ.1 விலையில் இட்லி, மதியம் 12 மணி முதல் 3 மணி வரையில் ரூ.5 விலையில் சாம்பார் சாதம், ரூ.3 விலையில் தயிர் சாதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மதுரை, திருப்பூர், கோவை, நெல்லை, சேலம், தூத்துக்குடி, வேலூர், ஈரோடு உள்ளிட்ட 10 மாநகராட்சியில் தலா 10 இடங்களில் இம்மாத இறுதியில் துவக்கப்படும்.

சென்னையில் காலை சிற்றுண்டியில் பொங்கல் கேட்கிறார்கள். மாலையில் சப்பாத்தி கேட்கிறார்கள். எனவே இம்மாத இறுதியில் காலையில் ஒரு ரூபாய் இட்லி கொடுப்பது போல ரூ.5 விலையில் பொங்கல், சாம்பார் வழங்கப்படும். மதியம் ரூ.5 விலையில் எலுமிச்சை சாதம் அல்லது கருவேப்பிலை சாதம் வழங்கப்படும்.

மாலையில் சப்பாத்தி வழங்குவதற்கான இயந்திரம் கொள்முதல் செய்ய அவகாசம் தேவைப்படுவதால் செப்டம்பர் முதல் மாலை 2 சப்பாத்தி பருப்பு அல்லது குருமா ரூ.3 விலையில் வழங்கப்படும். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.