Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருப்பூரில் மலிவு விலை உணவகம்: பயிற்சிக்காக, சுயஉதவி குழு பெண்கள் இன்று சென்னை பயணம்

Print PDF
தினத்தந்தி               21.05.2013

திருப்பூரில் மலிவு விலை உணவகம்: பயிற்சிக்காக, சுயஉதவி குழு பெண்கள் இன்று சென்னை பயணம்


திருப்பூர் மாநகராட்சியில் 10 இடங்களில் மலிவு விலை உணவகம் அமைக் கப்பட உள்ளது. இதை நடத்த உள்ள சுயஉதவி குழு பெண்கள் 20 பேர் பயிற்சிக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை செல்கிறார் கள்.

மலிவு விலை உணவகம்


தமிழகத்தில் திருப்பூர் உள்பட 9 மாநகராட்சிகளில் மலிவு விலை உணவகம் திறக்க முதல்அமைச்சர் ஜெய லலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருப்பூர் மாநகராட் சியில் 1வது மண்டல அலு வலகம், அனுப்பர்பாளையம், ஆத்துப்பாளையம், பழைய பஸ்நிலையம், பாண்டியன் நகர், சிறு பூலுவபட்டி ரிங் ரோடு, செவந்தாம் பாளையம், நல்லூர், குமரன் வணிக வளா கம், சந்தைபேட்டை ஆகிய 10 இடங்களில் மலிவு விலை உணவகம் அமைக்கப் பட உள்ளன. இந்த உணவகங்கள் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் நடத்தப்பட உள்ளன. இதற் காக சமையல் கலையில் முன் அனுபவம் கொண்ட குழுக்க ளுக்கு கடந்த வாரம் அழைப்பு விடுக்கப்பட்டது. முதற்கட்ட மாக அதில் 10 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன.

ஆலோசனைக்கூட்டம்

தேர்வு செய்யப்பட்ட குழுக் களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு மாந கர் நல அதிகாரி டாக்டர் செல்வகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 10 மகளிர் குழுக்களின் தலைவி கள் மற்றும் அவர்களின் உதவி யாளர்கள் கலந்து கொண் டனர். இவர்களுக்கு நவீன முறையில் சுகாதாரமாக சமை யல் செய்வது எப்படி? உண வகத்தை எப்படி பாராமரிக்க வேண்டும்? என்பது போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட் டது.

சென்னை பயணம்

இதைத்தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட 10 மகளிர் குழுக்களின் தலைவிகள் மற் றும் அவர்களின் உதவியாளர் கள் 20 பேருக்கும் நாளை (புதன்கிழமை) சென்னையில் ஒரு நாள் செயல் முறை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னையில் செயல்பட்டு வரும் மலிவு விலை உணவகத் துக்கு இவர்களை அழைத்து சென்று செயல் விளக்கம் காண்பிக்கப்படுகிறது.

இதற்காக இன்று (செவ் வாய்க்கிழமை) மதியம் மகளிர் சுய உதவிகுழு பெண்கள் 20 பேரும் திருப்பூரில் இருந்து 2 வேன்களில் சென்னை புறப் பட்டு செல்கிறார்கள். இவர் களுடன் மாநகர் நல அதிகாரி டாக்டர் செல்வகுமார் தலைமையிலான சுகாதார ஆய்வாளர்களும் சென்னை செல்கிறார்கள்.