Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"அம்மா' உணவகம் புகார் மற்றும் ஆலோசனை தெரிவிக்க தொலைபேசி எண்கள்

Print PDF
தினமலர்                 23.05.2013

"அம்மா' உணவகம் புகார் மற்றும் ஆலோசனை தெரிவிக்க தொலைபேசி எண்கள்


சென்னை: மலிவு விலை உணவகத்தில், புகார் மற்றும் ஆலோசனைகளை பதிவு செய்வதற்கு வசதியாக, மாநகராட்சி அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் எழுதி வைக்கப்பட்டு உள்ளன. சென்னையில், 200 மலிவு விலை உணவகங்கள் செயல்படுகின்றன.
 
இவற்றில், மக்கள் தங்கள் கருத்தை பதிவு செய்ய புத்தகம், புகார் பெட்டி ஏற்கனவே உள்ளன.மேயர் எண் இதையடுத்து, மலிவு விலை உணவகம் குறித்து, பொதுமக்களிடம் இருந்து முறையான ஆலோசனைகள், குறைகளை பதிவு செய்ய ஒவ்வொரு உணவகத்திலும் தொலைபேசி எண்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. இதில், மாநகராட்சி புகார் பிரிவு, மேயர், ஆணையர், துணை ஆணையர் (சுகாதாரம்), மாநகர சுகாதார அலுவலர், கூடுதல் சுகாதார அலுவலர், மண்டல அலுவலர், மண்டல சுகாதார அலுவலர் உள்ளிட்டோரின் தொலைபேசி எண்கள் குறிக்கப்பட்டுள்ளன.

அதேபோல், மலிவு விலை உணவகங்களில், சமைக்கும் பாத்திரங்கள் மற்றும் பொதுமக்கள் சாப்பிடும் தட்டுகளை வெந்நீரில் கழுவுவதற்கு வசதியாக, "வாட்டர் ஹீட்டர்களை' மாநகராட்சி வழங்குகிறது. ஓரிரு நாளில்... மணலி மண்டலத்திற்கு உட்பட்ட மலிவு விலை உணவகங்களில் அமைக்க, "வாட்டர் ஹீட்டர்கள்' வந்து இறங்கியுள்ளன. இவை ஒருசில நாட்களில் மலிவு விலை உணவகங்களில் பொருத்தப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல, 200 மலிவு விலை உணவகங்களிலும் "வாட்டர் ஹீட்டர்' பொருத்தும் பணி நடந்து வருகிறது.