Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பகுதியில் அம்மா திட்ட உணவகம் ஜூன் 31ம் தேதி திறக்க ஏற்பாடுகள் தீவிரம்

Print PDF
தினமலர்        23.05.2013

மாநகராட்சி பகுதியில் அம்மா திட்ட உணவகம் ஜூன் 31ம் தேதி திறக்க ஏற்பாடுகள் தீவிரம்


ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில், பத்து இடங்களில் இம்மாதம், 31ம் தேதி அம்மா திட்ட உணவகம் திறக்கும் வகையில் பணிகள் நடந்து வருகிறது.

தமிழகத்தில், சென்னை மாநகராட்சியில் உள்ள, 200 வார்டுகளிலும், தலா ஒன்று வீதம் அம்மா திட்ட உணவகம் செயல்படுகிறது. தவிர, தமிழகத்தில் உள்ள ஒன்பது மாநகராட்சிகளிலும், தலா, 10 அம்மா உணவகம், இம்மாதம், 31ம் தேதிக்குள் திறக்க முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். இதன்படி, ஈரோடு மாநகராட்சி பகுதியில் இதற்காக, 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு விரைந்து பணிகள் நடக்கிறது.

இந்நிலையில் நகராட்சி நிர்வாக இணை ஆணையர் அஜய் யாதவ், ஈரோடு வருகை புரிந்து, உணவகம் அமையும் சோலார் நாடார் மேடு வளாகத்தை பார்வையிட்டார்.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: வரும், 31ம் தேதிக்குள் அம்மா உணவகம் அமைக்கும் பணியை முடிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இப்பணிகளை பார்வையிட, இணை ஆணையர் அஜய் யாதவ் வந்து ஆய்வு செய்துள்ளார்.

ஒவ்வொரு உணவகமும், ஒரு சுய உதவிக்குழுவால் நடத்தப்படும். இதற்காக குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உணவகத்துக்கு தேவையான, பாத்திரம் மற்றும் பிற பொருட்கள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. வரும், 31ம் தேதி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த உணவகங்களை முதல்வர் திறந்து வைக்க வாய்ப்புள்ளது. அதற்கேற்ப பணிகள் நடந்து வருகிறது, என்றனர்.