Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அம்மா உணவகம் மூலம் ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவுகளை வழங்கி வருபவர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் பேச்சு

Print PDF
தினத்தந்தி               28.05.2013

அம்மா உணவகம் மூலம் ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவுகளை வழங்கி வருபவர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் பேச்சு


அம்மா உணவகம் மூலம் ஏழை, எளியவர்களுக்கு மலிவு விலையில் உணவுகளை வழங்கி வருபவர் முதல்– அமைச்சர் ஜெயலலிதா என்று அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் பேசினார்.

விலையில்லா பொருட்கள்


செய்யாறு ஊராட்சி ஒன்றி யம் திருமணி, கீழப்பழந்தை ஆகிய கிராமங்களில் விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும் விழா நடந்தது. செய்யாறு உதவி கலெக்டர் ஜனனி சவுந்தர்யா தலைமை தாங்கி னார். தனித்துணை கலெக் டர் (சிறப்பு திட்டங்கள்) ராணி, செய்யாறு ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் விமலாமகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்யாறு தாசில்தார் பிரபா கரன் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு விருந் தினராக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் கலந்து கொண்டு 1,336 பயனாளிகளுக்கு விலை யில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கி பேசி னார். அப்போது அவர்பேசிய தாவது:–

நலத்திட்டங்கள்

முதல்–அமைச்சர் ஜெய லலிதா மக்கள் கேட்காமலேயே பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மக்கள் அரசை நாடி சென்று உதவிகளை கேட்டனர். ஆனால் அரசே மக்களை நாடி சென்று உதவிகளை செய்கிற நிலை மையை உருவாக்கியவர் ஜெயலலிதா. அம்மா திட்டத்தை அறிவித்து வாரந் தோறும் செவ்வாய்க்கிழமை அன்று ஒரு தாலுகாவில் உள்ள அனைத்து அலுவலர்களையும் வரவழைத்து மக்களிடம் குறைகளை கேட்டு அவர் களுக்கு உடனே உதவிகள் செய்ய உத்தரவிட்டுள்ளார் முதல்–அமைச்சர் ஜெய லலிதா.

அம்மா உணவகம்


ஏழை, எளிய மக்கள் நடுத்தர மக்கள் பசியாற உணவு சாப்பிட அம்மா உணவகம்  தொடங்கி இட்லி ஒரு ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய், சாம்பார் சாதம் 5 ரூபாய் என்று மலிவு விலையிலும் உணவுகளை வழங்கி வருகிறார். இந்த திட்டம் தமிழகத்தில் 10 மாநகராட்சிகளிலும் தொடங் கப்படுகிறது.

தற்போது திருமணி கிராமத் தில் 1,033 குடும்பங்களுக்கு ரூ.56 லட்சத்து 36 ஆயிரத்து 652 மதிப்பிலும், கீழப்பழந்தை யில் 303 குடும்பங்களுக்கு ரூ.16 லட்சத்து 49 ஆயிரத்து 532 மதிப்பிலும் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2011–12) 88 ஆயிரம் குடும் பங்களுக்கு வழங்கப்பட் டுள்ளது. 2012–13–ம் ஆண் டுக்கு 2 லட்சத்து 11 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள் ளார். இவ்வாறு அவர் பேசினார். விழாக்களில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ரமேஷ் (திருமணி), சுதாவடிவேல் (கீழப்பழந்தை) மற்றும் உள் ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட னர்.

வளர்ச்சி பணிகள் ஆய்வு

பின்னர் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். திருமணியில் தாய் திட்டத்தின் மூலம் ரூ.17 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் தார்சாலை அமைக்கும் பணியையும், பசுமை வீடுகள் திட்டத்தின் மூலம் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 10 வீடுகளின் கட்டுமான பணிகளையும், திருமணி– ஆரணி சாலையில் நெடுஞ்சாலை துறையின் மூலம் ரூ.1 கோடியே 49 லட்சம் மதிப் பீட்டில் பாலம் கட்டப்பட்டு வருவதையும் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது உதவி கலெக்டர் ஜனனிசவுந்தர்யா, ஊரக வளர்ச்சித்துறையின் உதவி கோட்ட பொறியாளர் எஸ்.பெருமாள், செய்யாறு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏ.பெருமாள், குகாநந்தன், வெம்பாக்கம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திரா, சித்ரா மற்றும் பலர் உடன் இருந்தனர்.