Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை மாநகராட்சியில் 10 இடங்களில் மலிவு விலை உணவகம் திறப்பு

Print PDF
தினகரன்         03.06.2013

நெல்லை மாநகராட்சியில் 10 இடங்களில் மலிவு விலை உணவகம் திறப்பு


நெல்லை, : சென்னை மாநகராட்சியை தொடர்ந்து மீதமுள்ள 9 மாநகராட்சிகளிலும் முதல்வர் ஜெய லலிதா நேற்று பிற்பகலில் மலிவு விலை உணவகங் களை தொடங்கி வைத்தார்.

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 10 இடங்களில் உணவகங்கள் திறக்கப்பட்டன. இவற்றில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் ரூ.5க்கும், தயிர் சாதம் ரூ.3க்கும் வழங்கப்படுகிறது.  

மேலப்பாளையத்தில் நடந்த மலிவு விலை உணவக திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தூர் பாண் டியன், மாநகர் மாவட்ட செயலாளர் முருகையா பாண்டியன், கலெக்டர் சமயமூர்த்தி, மேயர் விஜிலா, ஜெ.,பேரவை செயலாளர் சுதா பரமசிவன் ஆகியோர் உணவு வகைகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், துரையப்பா, முத்து செல்வி, துணை மேயர் கணேசன், ஜெ.,பேரவை பரணி சங்கரலிங்கம், மானூர் ஒன்றிய சேர்மன் கல்லூர் வேலாயுதம், மாநகராட்சி கமிஷனர் மோகன், மண்டல சேர்மன்கள் ஹைதர் அலி, மோகன், தச்சை மாதவன், எம்.சி. ராஜன், முன்னாள் எம்எல்ஏ சக்திவேல் முருகன், முன்னாள் மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத் தையா, மாநகராட்சி பணிக்குழு சேர்மன் குறிச்சி சேகர், சுகாதார குழு சேர்மன் வண்ணை கணே சன், மகளிரணி செயலாளர் வசந்தி முருகேசன் , மாவட்ட இளைஞரணி பொருளாளர் அசன் ஜாபர்அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உணவகத்திலுள்ள பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தச்சை அலகு அலுவலகத்தில் செயல்படும் மலிவு விலை உணவகத்தையும் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

10 உணவகங்களும் இன்று முதல் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரையும் செயல்படும்.

உணவகம் செயல்படும் இடங்கள்

டவுன் தொண்டர் சன்னதி தெரு, தச்சநல்லூர் பழைய பஞ்சாயத்து அலுவலகம், மேலப்பாளையம் காவல் நிலையம் அருகிலுள்ள கட்டிடம் பாளை மனகாவலம்பிள்ளை ஆஸ்பத்திரி அருகேயுள்ள கட்டிடம், புதுப்பேட்டையில் மாநகராட்சி ஆஸ்பத்திரி வளாகம், கணேசபுரம் மாநகராட்சி துவக்கப்பள்ளி கட்டிட வளாகம், டவுன் வையாபுரிநகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி சமீபம், பாளை அம்பேத்கர் காலனி மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலக புதிய கட்டிடம் எதிர்புறம், பாளை திம்மராஜபுரம் அலகு அலுவலகம் சமீபம், மேலப்பாளையம் பழைய அலகு அலுவலக வளாகம்.